Published : 05 May 2025 12:12 AM
Last Updated : 05 May 2025 12:12 AM

நாடு முழுவதும் 5000 மையங்களில் நீட் தேர்வு: இயற்பியல் கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து

சென்னை: ​நாடு முழு​வதும் நேற்று நீட் தேர்வு அமைதியாக நடந்து முடிந்​தது. இயற்​பியல் பாடக் கேள்வி​கள் மிகக் கடின​மாக இருந்​த​தாக தேர்​வர்​கள் தெரி​வித்​தனர்.

நாடு முழு​வதும் உள்ள மருத்​து​வக் கல்​லூரி​களில் எம்​.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்​தா, ஆயுர்​வே​தா, யுனானி, ஓமியோபதி ஆகிய​வற்​றில் இளநிலை படிப்​பு​களுக்​கும், கால்​நடை மருத்​து​வப் படிப்​பில் அகில இந்​திய ஒதுக்​கீட்டு இளநிலை படிப்​பு​களுக்​கும், ராணுவ நர்​சிங் கல்லூரி​யில் பி.எஸ்​சி. நர்​சிங் படிப்​புக்​கும்நீட் நுழைவுத் தேர்​வில் தேர்ச்சிபெற வேண்​டியது அவசி​யம்.

இந்த தேர்​வில் பெறும் மதிப்​பெண் அடிப்​படை​யிலேயே மாணவர் சேர்க்​கை​யும் நடத்​தப்​பட்டு வரு​கிறது. அந்த வகை​யில் 2025-26-ம் கல்​வி​யாண்டு மருத்​து​வப் படிப்​பு​களில் சேர்​வதற்​கான நீட் நுழைவுத் தேர்வை எழுது​வதற்கு நாடு முழு​வ​தி​லும் இருந்து சுமார் 10 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட மாணவர்​கள், 12 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட மாணவி​கள் என மொத்​தம் சுமார் 22 லட்​சத்து 70 ஆயிரம் பேர் விண்​ணப்​பித்து இருந்​தனர்.

இந்த தேர்​வுக்​காக 5 ஆயிரத்து 453 தேர்வு மையங்​கள் இந்​தி​யா​விலும், 13 வெளி​நாடு​களில் உள்ள நகரங்​களி​லும் அமைக்​கப்​பட்டு இருந்​தன. தமிழகத்​தை பொறுத்​தவரை, சுமார் ஒரு லட்​சத்து 50 ஆயிரம் மாணவர்​கள் தேர்வை எழுத விண்​ணப்​பித்​திருந்​தனர். அதி​லும் குறிப்​பாக சென்​னை​யில் மட்​டும் 44 மையங்​களில் 21 ஆயிரத்து 960 பேர் தேர்​வெழுத விருப்​பம் தெரி​வித்து இருந்​தனர். அதன்​படி, விண்​ணப்​பித்​தவர்​களுக்​கான நீட் தேர்வு நாடு முழு​வதும் நேற்று பிற்​பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடந்​தது. தேர்வு மையத்​துக்​குள் காலை 11.30 மணி​யில் இருந்து தேர்​வர்​கள் செல்ல அனு​ம​திக்​கப்​பட்​டனர். பிற்​பகல் 1.30 மணி வரை உள்ளே செல்ல அனு​மதி வழங்​கப்​பட்​டது. அதன்​பின்​னர், தேர்வு மையம் மூடப்​பட்​டு, தேர்​வர்​கள் யாரை​யும் உள்ளே செல்ல அனு​ம​திக்​க​வில்​லை.

கடந்த ஆண்டு வினாத்​தாள் கசிவு விவ​காரம் பெரும் விஸ்​வரூபம் எடுத்த நிலை​யில், இந்த ஆண்டு நீட் தேர்​வுக்கு கடும் கட்டுப்​பாடு​களும், பரிசோதனையும் இருந்​தது. கட்​டுப்​பாடு​கள் குறித்த அறி​விப்பு வெளி​யிட்​டும், சில மாணவி​கள் காதணி, மூக்​குத்​தி, மோதிரம், செயின், கொலுசு போன்ற ஆபரணங்​கள் அணிந்து வந்​ததை​யும், அதனை தேர்வு மையத்​துக்கு வெளியே பெற்​றோரிடம் கழற்​றிக் கொடுத்து ஒப்​படைத்து சென்​றதை​யும் பார்க்க முடிந்​தது.

பெரும்​பாலான மாணவி​கள் சாதாரண உடைகளையே அணிந்து வந்​திருந்​தனர். மாணவர்​கள் முழுக்கை சட்டை அணிய அனு​மதி மறுக்​கப்​பட்​டது. அவர்​களில் பலரும் டி-ஷர்ட், அரைக்கை சட்​டை, பேண்ட்அணிந்​திருந்​தனர். மேலும் பெல்ட், ஷூ அணிந்து வந்​திருந்த மாணவர்​கள் அதனை தங்​கள் பெற்​றோரிடம் கொடுத்து சென்​றனர். தேர்வு மைய நுழைவு​வாயி​லில் போலீ​ஸாரும், தேர்வை நடத்​தக் கூடிய தேசிய தேர்வு முகமை சார்​பில் நியமிக்​கப்​பட்ட பணி​யாளர்​களும் தொழில்​நுட்​பம், மின்​னணு சார்ந்த பொருட்​கள் கொண்டு செல்​கிறார்​களா என மெட்​டல் டிடெக்​டர் மூலம் தீவிர சோதனை நடத்​திய பிறகே மாணவர்​களை உள்ளே அனு​ம​தித்​தனர். மாணவர்​கள் கொண்டு வந்த தேர்​வுக்​கூட நுழைவுச் சீட்டு மற்​றும் அடை​யாள அட்​டைகளும் சரி​பார்க்​கப்​பட்​டன. சென்​னை, எம்​சிசி பள்ளி மையத்​தில் முன்​னாள் அமைச்​சர் பொன்​முடி​யின் பேரன் தேர்​வெழு​தி​னார்.

பிளஸ் 2-வில் அதிக கேள்வி​: தேர்வு குறித்து மாணவர்​கள் கூறும்​போது, "இயற்​பியல் பாடகேள்வி​கள் மிகக் கடின​மாக இருந்​தது. இதில் மிகக் குறைந்த கேள்வி​களுக்கே பதிலளிக்க முடிந்​தது. வேதி​யியல் பாட கேள்வி​கள் சற்று கடின​மாக இருந்​தது. உயி​ரியல் கேள்வி​கள் எளி​தாக இருந்​தது. ஆனால் வினாக்​களை சிந்​தித்து பதில் எழுத அதிக நேரம் எடுக்க வேண்​டிய சூழல் இருந்​தது. இதனால் பிற வினாக்​களில் கவனம் செலுத்த முடிய​வில்​லை. 11-ம் வகுப்பு கேள்வி​கள் அதி​க​மாக கேட்​கப்​படும் என எதிர்​பார்க்​கப்​பட்ட நிலை​யில், 12-ம் வகுப்​பில் இருந்து அதிக கேள்வி​கள் கேட்​கப்​பட்​டிருந்​தது. மொத்​தம்​ கேட்​கப்​பட்​ட 180 வி​னாக்​களுக்​கும்​ பதிலளித்​தோம்​" என்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x