Published : 02 May 2025 08:02 AM
Last Updated : 02 May 2025 08:02 AM
சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ பிரதானத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (மே 2) நிறைவு பெறுகிறது.
நாடு முழுவதுமுள்ள ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும்.
இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இருகட்டமாக நடத்தப்படும். அதன்படி 2025-ம் ஆண்டுக்கான முதன்மைத் தேர்வு ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் நடத்தி முடிக்கப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான ஜேஇஇ பிரதானத் தேர்வு மே 18-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வை நடப்பாண்டில் கான்பூர் ஐஐடி நடத்துகிறது.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்ரல் 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (மே 2) நிறைவு பெறுகிறது. எனவே, தகுதியான மாணவர்கள் https://jeeadv.ac.in/ துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்.
பிரதானத் தேர்வு இரு தாள்களாக காலை, மதியம் நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடி.களில் சேர்க்கை இடங்கள் கலந்தாய்வு மூலமாக ஒதுக்கப்படும். மேலும், கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT