Published : 28 Apr 2025 12:37 AM
Last Updated : 28 Apr 2025 12:37 AM

ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புக்கான என்சிஇடி தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியீடு

ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் படிப்புகளுக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வுக்குரிய ஹால்டிக்கெட்களை என்டிஏ வெளியிட்டுள்ளது.

நம்நாட்டில் ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் பட்டப் படிப்புகளில் சேர தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வில் (என்சிஇடி) தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வு, கணினி வாயிலாக நாளை (ஏப்ரல் 29) நடத்தப்பட உள்ளது. இதற்காக நாடு முழுவதும் 178 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 20-ல் தொடங்கி மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. விண்ணப்பித்தவர்களுக்கான ஹால்டிக்கெட்களை என்டிஏ நேற்று முன்தினம் வெளியிட்டது. அவற்றை https://exams.nta.ac.in/NCET/ எனும் வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது ncet@nta.ac.in மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x