Published : 27 Apr 2025 11:50 AM
Last Updated : 27 Apr 2025 11:50 AM
மாற்றுப் பணி உத்தரவு பெற்று, வேறு பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களை உடனே அங்கிருந்து விடுவித்து அவரவர் பள்ளிகளுக்கு அனுப்புமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கடந்த 2024 -25ம் ஆண்டில் அரசு உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சில பட்டதாரி ஆசிரியர்களுக்கு பல்வேறு காரணங்கள் அடிப்படையில் வேறு பள்ளிகளில் மாற்றுப் பணி பார்ப்பதற்கு ஆணை வழங்கப்பட்டது. நடப்பு கல்வி ஆண்டுக்கான கடைசி வேலை நாள் ஏப்ரல் 30ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
எனவே, கடந்த ஆண்டில் மாற்றுப் பணி உத்தரவு மூலம் வேறு பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களை அங்கிருந்து உடனடியாக விடுவித்து, பள்ளி இறுதி வேலை நாளில் அவரவர் பள்ளியில் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT