Last Updated : 24 Apr, 2025 04:49 PM

 

Published : 24 Apr 2025 04:49 PM
Last Updated : 24 Apr 2025 04:49 PM

யுபிஐ ‘க்யூஆர் கோடு’ வசதிகளை ஏற்படுத்த பல்கலை.கள், கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவு

சென்னை: மாணவர்கள் தங்கள் கல்விக் கட்டணங்களை யுபிஐ ‘க்யூஆர் கோடு’ மூலமாக செலுத்துவதற்கான வசதிகளை பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் தங்களது வளாகத்தில் ஏற்படுத்த வேண்டுமென யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து விதமான உயர் கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: டிஜிட்டல் சார்ந்த அறிவாற்றாலை சமூகத்தில் அனைவரும் பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடனும், அறிவுசார் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் மத்திய அரசு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவித்து வருகிறது. பணபரிமாற்றத்தை குறைத்து அனைத்தும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது நம்நாட்டில் யுபிஐ பாதுகாப்பான, விரைவான பணப்பரிமாற்றத்தையும் உறுதி செய்கிறது. இதற்கிடையே கிராமப்புற கல்வி நிலையங்களில் மாணவர்கள் கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம், பாடப் புத்தகங்கள் உட்பட பல்வேறு கட்டணங்களை யுபிஐ மூலம் செலுத்துவதை விரும்புகின்றனர். இது அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. எனவே, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் கல்வி சார்ந்த பணப்பரிமாற்றங்களை மாணவர்கள் ஆன்லைன் மற்றும் நேரடியாக எளிதில் கையாளும் வகையில் யுபிஐ ‘க்யூஆர் கோடு’ வசதிகளை வளாகத்தில் உறுதி செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x