Published : 22 Apr 2025 06:52 AM
Last Updated : 22 Apr 2025 06:52 AM

10-ம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில் தவறான கேள்விக்கு ஒரு மதிப்பெண்: தேர்வுத்துறை உத்தரவு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் இடம்பெற்ற தவறான கேள்விக்கு மாணவர்கள் விடையளிக்க முயற்சி செய்திருந்தாலே, ஒரு மதிப்பெண் வழங்க அரசு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவடைந்து, விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது. அதில், சமூக அறிவியல் விடைத்தாள் மதிப்பீட்டு பணி நேற்று தொடங்கியது.

இதற்கிடையே, அந்த பாடத்தில் ஒரு மதிப்பெண் வினா பகுதியில் 4-வது கேள்வியில் ‘கூற்று: ஜோதிபா பூலே ஆதரவற்றவர்களுக்கான விடுதிகளையும், விதவைகளுக்கான காப்பகங்களையும் திறந்தார். காரணம்: ஜோதிபா பூலே குழந்தை திருமணத்தை எதிர்த்தார். விதவைகள் மறுமணத்தை ஆதரித்தார்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கேள்வியில் 2 வாக்கியங்களுமே முரணாக இருப்பதாகவும், அதற்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், அந்த கேள்விக்கு மாணவர்கள் விடையளிக்க முயற்சி செய்திருந்தாலே, முழு மதிப்பெண் (ஒரு மார்க்) வழங்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குநர் ந.லதா உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x