Published : 16 Apr 2025 05:33 AM
Last Updated : 16 Apr 2025 05:33 AM

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு

சென்னை: பத்​தாம் வகுப்​புக்​கான பொதுத்​தேர்வு நேற்​றுடன் முடிந்​து​விட்​டது. மேலும், இறு​தித் தேர்​வான சமூக அறி​வியல் எளி​தாக இருந்​த​தாக மாணவர்​கள் தெரி​வித்​தனர். தமிழக பள்​ளிக்​கல்வி பாடத்​திட்​டத்​தில் 10, பிளஸ் 1 மற்​றும் பிளஸ் 2 வகுப்​பு​களுக்கு பொதுத் தேர்வு நடத்​தப்​பட்டு வரு​கிறது. அதன்​படி நடப்​பாண்டு பிளஸ் 1 மற்​றும் பிளஸ் 2 வகுப்​புக்​கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3 முதல் 27-ம் தேதி வரை நடத்​தப்​பட்​டது.

இதையடுத்து பத்​தாம் வகுப்​புக்​கான பொதுத்​தேர்வு மார்ச் 28-ம் தேதி தொடங்கி நேற்​றுடன் நிறைவு பெற்​றது. இறுதி நாளான நேற்று சமூக அறி​வியல் பாடத் தேர்வு நடை​பெற்​றது. இந்த தேர்வை 4,113 மையங்​களில் சுமார் 9 லட்​சம் மாணவ, மாணவி​கள் எழு​தினர்.

இதையடுத்து விடைத்​தாள் திருத்​துதல் பணி​கள் ஏப்​ரல் 21 முதல் 30-ம் தேதி வரை நடை​பெற உள்​ளன. இதற்​காக தமிழகம் முழு​வதும் 88 தேர்வு முகாம்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இந்த பணி​களில் சுமார் 50 ஆயிரம் பட்​ட​தாரி ஆசிரியர்​கள் ஈடு​படுத்​தப்பட உள்ளனர். தேர்வு முடிவு​கள் மே 19-ம் தேதி வெளி​யிடப்​படும் என்று தேர்​வுத் துறை அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x