Published : 12 Apr 2025 05:38 AM
Last Updated : 12 Apr 2025 05:38 AM

10-ம் வகுப்பு அறிவியல் தேர்வு எளிது: மாணவர்கள் கருத்து

சென்னை: தமிழகத்​தில் 10-ம் வகுப்​புக்​கான பொதுத்​தேர்வு மார்ச் 28-ம் தேதி தொடங்​கியது. இதையொட்​டி, அறி​வியல் பாடத் தேர்வு நேற்று நடை​பெற்​றது. மாநிலம் முழு​வதும் 4,113 மையங்​களில் 9 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் தேர்​வெழு​தினர்.

இதற்​கிடையே, அறி​வியல் பாடத் தேர்வு வினாத்​தாள் எளி​தாக இருந்​த​தாக மாணவர்​கள் தெரி​வித்​தனர். 2 மற்​றும் 4 மதிப்​பெண் பிரிவு கட்​டாய கேள்வி​கள் மட்​டும் சற்று கடின​மாக கேட்​கப்​பட்​டன.

மற்​றப் பகுதி வினாக்​கள் அனைத்​தும் எளிமை​யாக இருந்​தன. மாணவர் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்​டை​விட உயரும் என்று ஆசிரியர்​கள் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது. கடைசித் தேர்​வான சமூக அறி​வியல் தேர்வு வரும் 15-ம் தேதி நடை​பெற உள்​ளது. அத்​துடன் 10-ம் வகுப்பு பொதுத்​தேர்வு நிறைவடைகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x