Last Updated : 30 Mar, 2025 03:21 PM

 

Published : 30 Mar 2025 03:21 PM
Last Updated : 30 Mar 2025 03:21 PM

செய்யூருக்கு வந்தது அரசு கல்லூரி - மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளதால் மக்கள் மகிழ்ச்சி

செய்யூர் வட்டத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் தொலைதூரம் சென்று உயர்கல்வியை தொடர முடியாத நிலை இருந்த நிலையில், உள்ளூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக் க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை தொடர்பாக 'இந்து தமிழ் திசை'யில் செய்தி வெளியானது. இதன் எதிரொலி யாகவும் எம்எல்ஏவின் முயற்சியாலும் செய்யூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைத்து நடப்பாண்டிலேயே மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெற உள்ள தால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

செய்யூர் வட்டம் செங்கல்பட்டு மாவட்டத்தின் கடைசி பகுதியில் உள்ளதால், அப்பகுதியில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பொது மக்கள் தங்களின் பல்வேறு தேவைகளுக்காக பல கி.மீ. பயணித்து செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்கு போதுமான அளவில் பேருந்து வசதிகளும் இல்லை. இதிலும், மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்காக சுமார் 100 கி.மீ. பயணித் து சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் ப யில வேண்டிய நிலை உள்ளது.

ஏனென்றால், ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு நகரில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல் லூரி, உத்திரமேரூர் அருகே உள்ள திருப் புலிவனம் பகுதியில் ஒரு அரசு கல்லூரி, மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி பகுதியில்ஒரு அரசு கல்லூரி ஆகியவை மட்டுமே அமைந்து ள்ளன. இதில், பெரும்பாலும் கி ராமப்பகுதியை சேர்ந்த மாணவ, மாண விகளே அதிகம் பயின்று வருகின்றனர்.

இதிலும், செங்கல்பட்டு நகரில் உள்ள அரசு கல்லூரியில் மட்டுமே அதிக இடங்கள் உள்ளன. இதனால், செய்யூர், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் இக்கல்லூரியில் அதிகம் விண்ணப்பிக்கும் நிலை உள்ளது. இதிலும், இடம் கிடைப் பது அரிதான செயலாக உள்ளது. அப்படியே கிடைத்தாலும், நாள்தோறும் சுமார் 80 கி.மீ. தொலைவு பயணித்து வந்து உயர்கல்வி பயில வேண்டிய கட்டாயம் உள்ளது.

ஆனால், செய்யூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப் பகுதியில் இருந்து நகரப் பகுதிக்கு வருவதற்கு போதிய பேருந்து வசதிகளும் இல்லை. இதனால், பெற்றோர் கள் பெண் பிள்ளைகளை தொலைதூரம் அனுப்புவதற்கு தயக்கம் காட்டுவதால். பள்ளி கல்வியோடு பெரும்பாலான மாண விகள் தங்களின் கல்வியை முடித்துக் கொள்ளும் நிலை இருந்தது.

செங்கல்பட்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடப்பாண்டில் 990 இடங்களுக்கு 35 ஆயிரத்து 600 விண் ணப்பங்கள் வரப்பெற்றன. இதில், பெரும் பாலான நபர்களுக்கு இடம் கிடைக்கவில்லை அதனால், மாவட்டத்தின் கடைசி பகுதியில் உள்ள செய்யூர் மற்றும் சுற்றுப் புற கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் செய்யூரை மையப் படுத்தி அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரி ஏற்படுத்த வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுதொடர்பாக, கடந்த 2024-ம் ஆண்டு ஜுலை மாதம் 11ம் தேதி 'இந்து தமிழ் திசை' நாளிதழில் எம்எல்ஏ மற் றும் பொதுமக்களின் கோரிக்கை குறித்து செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலி யாகவும் மற்றும் செய்யூர் தொகுதி எம்எல்ஏவின் முயற்சியாலும், சட்டப் பேரவையில் செய்யூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.

இதன்பேரில், செய்யூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9 வகுப்புகளைக் கொண்ட கட்டிடத்தில் மேற்கண்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தற் காலிகமாக செயல்பட உள்ளது. இதில். வரும் 2025-26ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்க நடைபெற உள்ளது. அரசு கலை கல்லூரிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளி கட்டிடத்தை செய்யூர் எம்எல்ஏ பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், கல்லூரிக்கான நிரந்தர கட்டிடம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் துரித மாக மேற்கொள்ளப்படும் என தெரிவித் தார். இதனால், மாவட்டத்தின் கடைசி பகுதியில் உள்ள செய்யூர் தொகுதி மக்கள் நீண்ட கால கோரிக்கை நிறைவேறியுள்ள தாக பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி தெரிவித்து ள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x