Published : 13 Mar 2025 05:26 AM
Last Updated : 13 Mar 2025 05:26 AM

பள்ளி மாணவர்கள் கல்வி உதவி தொகைக்கு மார்ச் 15 வரை விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: பள்ளி மாணவர்கள் போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவித் தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 15 வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: நடப்பு கல்வி ஆண்டுக்கு (2024-2025) மத்திய அரசின் கல்வி உதவித்தொகை ((PM YASASVI Postmatric Scholarship For OBC's, EBC's & DNT's Students) பெறுவதற்காக

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல மாணவ / மாணவியர்களிடம் ஆன்லைன் விண்ணப்பங்கள் (https://umis.tn.gov.in) கடந்த பிப்ரவரி 28-ம் தேதி வரை வரவேற்கப்பட்டன.

தற்போது மாணவர்களின் நலன் கருதியும், கல்வி உதவித் தொகை பெற தகுதியுள்ள எந்த மாணவரும் விடுபட்டுவிடக்கூடாது என்பதை கருத்தில்கொண்டும் கல்வி உதவித்தொகைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 15 வரை நீட்டிக்கப்படுகிறது. காலஅவகாச நீட்டிப்பு விவரத்தை மாணவர்களிடம் தெரிவிக்குமாறு அனைத்து கல்வி நிலையங்களின் முதல்வர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதேபோல், மாணவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உடனடியாக ஆன்லைனில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x