Published : 10 Mar 2025 06:46 AM
Last Updated : 10 Mar 2025 06:46 AM

சென்​னை​யில் மார்ச் 16-ல் ‘இந்து தமிழ் திசை’ - ‘உனக்​குள் ஓர் ஐஏஎஸ்’ வழி​காட்டு நிகழ்ச்சி!

சென்னை: கிங்​மேக்​கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி வழங்​கும் ‘இந்து தமிழ் திசை’ - ‘உனக்​குள் ஓர் ஐஏஎஸ்’ எனும் வழி​காட்டு நிகழ்ச்சி சென்னை எழும்​பூர் எத்​தி​ராஜ் கல்​லூரி அரங்​கில் வரும் ஞாயிற்​றுக்​கிழமை (மார்ச் 16) காலை 9 மணிக்கு நடை​பெற உள்​ளது. ஐஏஎஸ் படிக்க வேண்​டும் என்ற ஆசை பலருக்​கும் உண்​டு.

ஆனால், அதற்​கான அடிப்​படை தேவை​யான கல்​வித் தகுதி என்ன, எத்​தனை ஆண்​டு​கள் படிக்க வேண்​டும், அதிக செல​வாகுமா என ஏராள​மான கேள்வி​களு​டன் தயங்கி நிற்​பவர்​களே அதி​கம். அவ்​வாறான தயக்​கத்​தை போக்​கி, யுபிஎஸ்சி தேர்​வுக்​கு படிப்​ப​தற்​கான தெளி​வைத் தரும் நோக்​கில் ‘உனக்​குள் ஓர் ஐஏஎஸ்’ என்ற நிகழ்ச்சி மாணவர்​களுக்​காக நடத்​தப்​படு​கிறது.

இந்த நிகழ்ச்​சி​யில், இந்​திய அரசின் வரு​மான வரித்​துறை ஆணை​யர் வி.நந்​தகு​மார், காவல் துறை கண்​காணிப்​பாளர் (போதைப் பொருள் தடுப்​பு பிரிவு) எ.ம​யில்​வாக​னன் ஆகியோர் சிறப்பு விருந்​தினர்​களாக பங்​கேற்று ஆலோ​சனை​களை வழங்​க​வுள்​ளனர். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முது​நிலை உதவி ஆசிரியர் மு.​முரு​கேசன், கிங்​மேக்​கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி தலை​வர் மற்​றும் மேலாண்மை இயக்​குநர் சத்யஸ்ரீ பூமி​நாதன் ஆகியோர் ஊக்​க​வுரை​யாற்ற இருக்​கிறார்​கள். காலை 9 மணிக்​கு தொடங்​கும் இந்த நிகழ்ச்சி மதி​யம் ஒரு மணி வரை நடை​பெறும்.

இந்த நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​கும் அனை​வருக்​கும், அனைத்து தேர்வு மாதிரி வினாத்​தாள், பாடத்​திட்ட கையேடு இலவச​மாக வழங்​கப்​படு​கிறது. மேலும், தேர்வு செய்​யப்​படும் 3 பேருக்கு இலவச பயிற்​சி​யும் கிங்​மேக்​கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சார்​பில் வழங்​கப்பட உள்​ளது. இந்​நிகழ்​வில் பங்​கேற்க விரும்​புவோர் https://www.htamil.org/IASCHENNAI லிங்​கில் அல்​லது இத்​துடன் உள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்​து, பதிவு செய்​து​கொண்​டு பங்​கேற்​று பயனடையலாம்​

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x