Published : 09 Mar 2025 06:51 AM
Last Updated : 09 Mar 2025 06:51 AM
சென்னை: ஒருங்கிணைந்த 4 ஆண்டு கால பிஏபிஎட் மற்றும் பிஎஸ்சிபிஎட் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகின்றன.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், 4 ஆண்டு கால ஒருங்கிணைந்த பிஎட் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, பிஏபிஎஎட், பிஎஸ்சிபிஎட் 7-வது செமஸ்டர்கள் மார்ச் 10-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி முடிவடைகின்றன. 5-வது செமஸ்டர் தேர்வுகள் மார்ச் 10 முதல் 15-ம் தேதி வரை நடைபெறுகின்றன. 3-வது செமஸ்டர் தேர்வுகள் மார்ச் 14-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி முடிவடைகின்றன. முதலாவது செமஸ்டர் தேர்வுகள் மார்ச் 17 முதல் 24-ம் தேதி வரை நடைபெற உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT