Published : 08 Mar 2025 05:56 AM
Last Updated : 08 Mar 2025 05:56 AM

‘ஸ்வயம் பிளஸ்’ வாயிலாக வேலைவாய்ப்பு சார்ந்த படிப்பு: உயர்கல்வி நிறுவனங்களுடன் சென்னை ஐஐடி ஒப்பந்தம்

சென்னை: ‘ஸ்வயம் பிளஸ்’ இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு சார்ந்த படிப்புகள் வழங்குவது தொடர்பாக சென்னை ஐஐடி பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் 10 ஆயிரம் மாணவர்களைச் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

மத்திய கல்வி அமைச்சகத்தின் `ஸ்வயம் பிளஸ்' ஆன்லைன் கல்வித் திட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களைச் சேர்க்கவும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு சார்ந்த புதிய படிப்புகளைப் படிக்க வாய்ப்பு வழங்கவும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

முதல்கட்டமாக சுமார் 2500 மாணவர்களை `ஸ்வயம் பிளஸ்' கல்வி திட்டத்தில் சேர்க்கவும் வரும் காலங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களைச் சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

`ஸ்வயம் பிளஸ்' ஆன்லைன் கல்வி திட்டத்தில் சேர்ந்து படிக்கும் பொறியியல் மாணவர்கள் தங்கள் படிப்புடன் அந்த பாடங்களைச் சேர்த்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு குறிப்பிட்ட கிரெடிட் வழங்கப்படும். `ஸ்வயம் பிளஸ்' திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக சென்னை ஐஐடி செயல்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x