Last Updated : 12 Feb, 2025 08:06 PM

1  

Published : 12 Feb 2025 08:06 PM
Last Updated : 12 Feb 2025 08:06 PM

இளநிலை படிப்புகளில் சுற்றுச்சூழல் கல்வி - கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

கோப்புப்படம்

சென்னை: இளநிலை பட்டப் படிப்புகளில் சுற்றுச்சூழல் கல்விக்கான பாடத்திட்டம் தொடர்பான வழிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழுவின்(யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: உயர்கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் இளநிலைப் பட்டப்படிப்புகளில் சுற்றுச்சூழல் கல்வி குறித்த பாடத்திட்டத்தை இடம்பெறச் செய்வது தொடர்பாக ஏற்கெனவே தேவையான வழிகாட்டுதல்கள் யுஜிசி சார்பில் வெளியிடப்பட்டுள்ளன. அவ்வாறு வகுக்கப்படும் பாடத்திட்டத்தில் பருவநிலை மாற்றம், கழிவு மேலாண்மை, பல்லுயிர் பாதுகாப்பு, நீடித்த வளர்ச்சி போன்ற அம்சங்கள் இடம்பெற வேண்டும்.

இதுதவிர சுற்றுச்சூழல் கற்பித்தலில் மாணவர்களுக்கு சிறந்த அனுபவங்களை தரும் வகையில் குழு கற்பித்தல் உட்பட புதிய அணுகுமுறைகளை புகுத்த வேண்டும். இதுசார்ந்த கூடுதலான வழிகாட்டுதல்கள் யுஜிசி தளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றி செயல்பட வேண்டும். நாட்டின் சுற்றுச்சூழலை சிறந்த முறையில் கட்டமைக்கும் வகையில் அதுதொடர்பான கற்றல் முறைகளை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க கல்வி நிறுவனங்கள் ஆதரவளிக்க வேண்டும்.

இதுதொடர்பாக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், செயல் திட்டங்கள் குறித்து அறிக்கையை யுஜிசி தளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x