Published : 10 Feb 2025 12:37 AM
Last Updated : 10 Feb 2025 12:37 AM

‘வானமே எல்லை’ அறிவியல் விநாடி-​வினா பரிசளிப்பு | விமானத் துறையில் அதிக வேலைவாய்ப்பு: ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு தகவல்

ரெமோ இன்டர்​நேஷனல் கல்லூரி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்திய ‘வானமே எல்லை’ எனும் அறிவியல் விநாடி-​வினா போட்​டி​யில் வெற்றி பெற்ற மாணவர்​களுக்கு சென்னை​யில் நேற்று பரிசுகளை வழங்கிய ராணுவ விஞ்​ஞானி வி.டில்​லிபாபு, ரெமோ குரூப் ஆஃப் இன்ஸ்​டிடியூசன்ஸ் முதல்வர் ரித்​திக் பாலாஜி, விஎல் ஏவியேஷன் நிறுவன செயல் இயக்​குநர் ஏ.ச​தீஷ்கு​மார், ‘இந்து தமிழ் ​திசை’ நாளிதழ் தலைமை செயல் அலு​வலர் ஷங்​கர் வி.சுப்​பிரமணி​யம். படங்​கள்: எம்​.​முத்து​கணேஷ்

சென்னை: ரெமோ இன்டர்​நேஷனல் கல்லூரி வழங்​கும் ‘இந்து தமிழ் திசை - வானமே எல்லை’ எனும் அறிவியல் விநாடி-​வினா இறுதிப் போட்​டி​யில் வென்ற மாணவர்​களுக்கு பரிசு, சான்​றிதழ்கள் வழங்​கப்​பட்டன. இதில் பேசிய ராணுவ விஞ்​ஞானி வி.டில்​லிபாபு, விமானத் துறை​யில் ஏராளமான வேலைவாய்ப்புகள் இருப்​ப​தாகத் தெரி​வித்​தார்.

பள்ளி மாணவர்​களிடையே அறிவியல் ஆர்வத்தை தூண்​டும் வகையில், ரெமோ இன்டர்​நேஷனல் கல்லூரி​யுடன் இணைந்து ‘வானமே எல்லை’ எனும் விமானத் துறை குறித்த அறிவியல் விநாடி-​வினா நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் முன்னெடுத்​தது. இந்த நிகழ்வை கலாம் சபா மற்றும் வில் ஏவியேஷன் (VIL AVIATION) ஆகியவை இணைந்து வழங்​கின.

இதில் பங்கேற்க தமிழகம், புதுச்​சேரியைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி​களில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் 1,500-க்​கும் மேற்​பட்​டோர் ஆர்வ​முடன் விண்​ணப்​பித்​தனர். முதல்​கட்ட விநாடி-​வினா இணைய வழியில் நடத்​தப்​பட்​டது. அடுத்த சுற்றுக்கு 300 பேர் தகுதிபெற்​றனர். அவர்​களுக்கான இறுதிக்​கட்டப் போட்​டிகள் சென்னை​யில் ஆலந்​தூரில் உள்ள ரெமோ இன்டர்​நேஷனல் கல்லூரி வளாகத்​தில் நேற்று நடைபெற்​றது.இ​திலிருந்து இறுதிச்​சுற்றுக்கு 12 பேர் தேர்​வுசெய்​யப்​பட்​டனர். அவர்கள் 6 குழுக்​களாகப் பிரிக்​கப்​பட்டு, இறுதிச்​சுற்று நடத்​தப்​பட்​டது.

முதல் பரிசு ரூ.25,000: போட்டியில் வெற்றி பெற்ற தர்ஷன் ரவி (வித்யா மந்திர் சீனியர் செகன்ட்ரி பள்ளி, சென்னை), மிதிலேஷ் பாஸ்கர் (ஜி.எஸ் கல்யாணசுந்​தரம் நினைவு சிபிஎஸ்இ பள்ளி, கும்​பகோணம்) ஆகியோ​ருக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரம் வழங்​கப்​பட்​டது. அடுத்து ஜோஷ்வா (வேலம்​மாள் பள்ளிக் குழு​மம், சென்னை), முகுந்தன் (ஹயாகிரிவாஸ் இன்டர்​நேஷனல் பள்ளி, சிவகாசி) ஆகியோ​ருக்கு 2-ம் பரிசாக ரூ.15 ஆயிரம், திவ்யம் குப்தா (சின்மயா இன்டர்​நேஷனல் ரெசிடென்​சியல் பள்ளி, கோவை), தனுஜ் (கேஎஸ்ஆர் அக் ஷரா அகாடமி, திருச்​செங்​கோடு) ஆகியோ​ருக்கு 3-ம் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்​கப்​பட்​டது.

நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற ​மாணவ, ​மாணவி​கள், பெற்​றோர், ஆசிரியர்​கள் உள்​ளிட்​டோர்.

நிறைவு விழா​வில் சிறப்பு விருந்​தினர்களாக ராணுவ விஞ்​ஞானி வி.டில்​லிபாபு, ரெமோ குரூப் ஆஃப் இன்ஸ்​டிடியூசன்ஸ் முதல்வர் ரித்​திக் பாலாஜி, விஎல் ஏவியேஷன் நிறுவன செயல் இயக்​குநர் ஏ.சதீஷ்கு​மார் பங்கேற்று, பரிசுகளை வழங்​கினர். நிகழ்ச்​சி​யில் சதீஷ்கு​மார் பேசும்​போது, “உலக அளவில் ட்ரோன் தொழில்​நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. இத்துறை​யில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இறுதிப் போட்​டிக்​குத் தேர்வான மாணவர்​களுக்கு ஹெலி​காப்​டரில் பயணிப்​ப​தற்கான வாய்ப்பு வழங்கப்​படும்” என்றார்.

‘இந்து தமிழ் திசை’​யின் தலைமை செயல் அலுவலர் ஷங்கர் வி.சுப்​பிரமணியம் பேசும்​போது, “உலகின் பெரிய நிறு​வனமான கூகுள் வளர்ச்​சிக்கு முக்​கியக் காரணம், தேடல் உணர்வுதான். தேடலின் மூலம் நாம் அறிவைப் பெருக்க வேண்​டும். விநாடி-​வினா போட்​டிக்கு ஒத்துழைப்பு தந்த அனைவருக்​கும் நன்றி” என்றார்.

ரெமோ குரூப் ஆஃப் இன்ஸ்​டிடியூசன்ஸ் முதல்வர் ரித்​திக் பாலாஜி பேசும்​போது, ‘‘நாம் மகிழ்ச்​சியாக இருப்​ப​தை​விட, நம்மால் எவ்வளவு பேர் மகிழ்ச்​சியாக இருக்​கிறார்கள் என்பதே முக்​கி​யம். வான்​வெளித் துறை​யில் ஈடுபாடு கொண்​ட​வர்கள் ரெமோ கல்லூரியை தேர்வு செய்ய முன்வர வேண்​டும்” என்றார்.

ராணுவ விஞ்​ஞானி வி.டில்​லிபாபு பேசி​ய​தாவது: விமானம், விண் ​வெளித் துறைகள் சுவராஸ்​ய​மானவை. மேலும், அதிக வேலை​வாய்ப்பு​களும் உண்டு. இவற்றில் நுழைய விமானத்​துறை சார்ந்த படிப்பு​களைப் படிக்கத் தேவை​யில்லை. பொறி​யியல், கணிதம், அறிவியல் எனவிருப்​பமான துறைகளை மாணவர்கள் தேர்வு செய்து படித்​தாலே போதும். பிளஸ்-2 வகுப்​பில் கணிதம், அறிவியல் படிக்​கா​விட்​டாலும், சீட் எனும் நுழைவுத்​தேர்வு வாயிலாக ஐஐடி​யில் சேரமுடி​யும். அங்கு இளநிலை வடிவ​மைப்பு படித்​தால், விமானத் துறை​யில் நல்ல வேலை​வாய்ப்புகள் இருக்​கின்றன. நம் நாட்​டில் ஸ்டார்ட்​-அப் நிறு​வனங்கள் பெருகி வருகின்றன. ஆர்வ​முள்​ளவர்கள் ஸ்டார்ட்அப் நிறு​வனங்​களைத் தொடங்க முயற்சிக்​கலாம். தமிழகம், உத்திரப் பிரதேச மாநிலங்​களில் விமானம், விண்​வெளித் துறை சார்ந்த தொழிற்​சாலைகளை அமைத்​துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி, நிதி​உதவி​யும் அளிக்​கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

எக்ஸ் க்விஸ் ஐடி நிறு​வனத்​தின் தலைமை செயலர் அலுவலர் அரவிந்த் விநாடி- வினா போட்​டிகளை வழிநடத்​தினார். இந்நிகழ்ச்​சியை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முது​நிலை உதவி ஆசிரியர் மு.முரு​கேஷ் தொகுத்து வழங்​கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x