Published : 24 Jan 2025 09:45 PM
Last Updated : 24 Jan 2025 09:45 PM

முழுநேர பிஎச்டி படிப்புக்கு ஊக்க உதவித்தொகை - எஸ்சி, எஸ்டி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!

சென்னை: எஸ்சி, எஸ்டி மாணவர்கள் முழுநேர பிஎச்டி படிப்புக்கான ஊக்க உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழக அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் முழுநேர முனைவர் படிப்பு (பிஎச்டி) பயிலும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் நடப்பு கல்வி ஆண்டுக்கு (2024-2025) ஊக்கத்தொகை பெற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள், கிறிஸ்தவ ஆதி திராவிட மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாதிரி விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை www.tn.gov.in/formdept_list.php என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை “ஆணையர், ஆதி திராவிடர் நல ஆணையரகம், எழிலகம், (இணைப்பு கட்டிடம்) சேப்பாக்கம், சென்னை 600 005” என்ற முகவரிக்கு பிப்ரவரி மாதம் 28-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். முந்தைய கல்வி ஆண்டு விண்ணப்ப படிவம் ஏற்றுக்கொள்ளப்படாது. இந்த உதவித்தொகை திட்டம் தொடர்பாக அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x