Published : 22 Jan 2025 06:03 AM
Last Updated : 22 Jan 2025 06:03 AM

2,238 அரசுப் பள்ளிகளில் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்: வழிகாட்டு நெறி​முறைகள் வெளியீடு

கோப்புப் படம்

சென்னை: தமிழகத்​தில் நூறாண்டு கடந்த 2,238 அரசுப் பள்ளி​களில் விழா கொண்​டாடப்பட உள்ளது. அதற்கான வழிகாட்டு​ நெறி​முறைகளை பள்ளிக்​கல்​வித் துறை வெளி​யிட்​டுள்​ளது.

இது தொடர்பாக தமிழ்​நாடு மாதிரிப் பள்ளி​களின் உறுப்​பினர் செயலர் இரா.சுதன், அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அதிகாரி​களுக்​கும் அனுப்பிய சுற்​றறிக்கை விவரம்: தமிழகத்​தில் 2,238 அரசுப் பள்ளிகள் 100 ஆண்டு​களைக் கடந்துள்ளன. இந்த பள்ளி​களில் பெற்​றோர் மற்றும் முன்​னாள் மாணவர்கள் வாயிலாக நூற்​றாண்டு திரு​விழா கொண்​டாடப்பட உள்ளது. அதன்படி அரசுப் பள்ளி​களின் நூற்​றாண்டு திரு​விழா முன்​னாள் முதல்வர் கருணாநிதி படித்த தஞ்சாவூர் திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியி​லிருந்து இன்று தொடங்​கப்பட உள்ளது.

இதை துணை முதல்வர் உதயநிதி ஸ்டா​லின், பள்ளிக்​கல்​வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்​யாமொழி ஆகியோர் தொடங்கி வைக்​கின்​றனர். தொடர்ந்து மாவட்​டத்​துக்கு ஒரு பள்ளி வீதம் 37 அரசுப் பள்ளி​களி​லும் நூற்​றாண்டு திரு​விழா நாளை (ஜனவரி 23) முதல் பிப்​ரவரி 2-ம் தேதி வரை கொண்​டாடப்பட உள்ளது. அதன்​பின் 100 ஆண்டு​களைக் கடந்த இதர பள்ளி​களி​லும் நூற்​றாண்டு நிகழ்வை ஆண்டு விழாவுடன் சேர்த்து கொண்டாட வேண்​டும். இதற்கான வழிகாட்டு நெறி​முறைகள் வெளி​யிடப்​பட்​டுள்ளன.

அதன்படி விழாக் குழு வாயிலாக முன்​னாள் ஆசிரியர்​கள், பெற்​றோர்​கள், உள்ளாட்சி உறுப்​பினர்​கள், கல்வி அலுவலர்​கள், முன்​னாள் மாணவர்கள் மற்றும் பள்ளியைச் சார்ந்த அனைவருக்​கும் நூற்​றாண்டு விழா குறித்து தெரியப்​படுத்த வேண்டும். தற்போது பணிபுரி​யும் மற்றும் முன்​னாள் ஆசிரியர்களை கவுரவிக்க வேண்​டும். மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்​படுத்த திட்​டமிட வேண்​டும். விழாவை புகைப்​படம், வீடியோ வாயிலாக பதிவு செய்து ஆவணப்​படுத்த வேண்​டும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் வழங்​கப்​பட்​டுள்ளன.

இதைப் பின்​பற்றி பள்ளி நூற்​றாண்டு திரு​விழாவை சிறப்​பாகக் கொண்டாட வேண்டுமென பள்ளி தலைமை ஆசிரியர்​களுக்​கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்​டும். இவ்வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x