Published : 20 Jan 2025 03:05 AM
Last Updated : 20 Jan 2025 03:05 AM

இந்த ஆண்டாவது ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படுமா? - பிஎட் பட்டதாரிகள், இடைநிலை ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

சென்னை: தமிழகத்​தில் கடந்த 2 ஆண்டு​களாக ஆசிரியர் தகுதித்​தேர்வு நடத்​தப்​படாத​தால் புதிய தேர்​வுக் கான அறிவிப்பு எப்போது வெளி​யிடப்​படும்? என்று பிஎட் பட்ட​தா​ரி​களும், இடைநிலை ஆசிரியர்​களும் மிகுந்த ஆவலுடன் எதிர்​பார்த்​துக் கொண்டிருக்​கிறார்​கள்.

மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டத்​தின்​படி, பள்ளி​களில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்​களும், பிஎட் முடித்த பட்ட​தாரி ஆசிரியர்​களும் ஆசிரியர் தகுதித்​தேர்​வில் (டெட்) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்​டும். அதேபோல், கேந்​திரிய வித்​யாலயா பள்ளி​கள், நவோதயா பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பாடத்​திட்டம் உள்ள பள்ளி​களில் மத்திய ஆசிரியர் தகுதித்​தேர்வு (சிடெட்) தேர்ச்சி கட்டாயம் ஆகும். சிடெட் தேர்வை மத்திய அரசு சார்​பில் சிபிஎஸ்இ நடத்தி வருகிறது. மாநில அளவிலான டெட் தேர்வை அந்தந்த மாநிலத்​தில் ஏதேனும் ஒரு தேர்வு அமைப்பு நடத்​தும். அதன் ​படி, தமிழகத்​தில் டெட் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடத்து​கிறது.

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்​சில் (என்​சிடிஇ) விதி​முறை​யின்​படி, ஆசிரியர் தகுதித்​தேர்வு ஆண்டுக்கு 2 தடவை நடத்​தப்பட வேண்​டும். அந்த வகையில், சிடெட் தேர்வு ஆண்டுக்கு 2 தடவை (ஜனவரி -டிசம்​பர்) முறையாக நடத்​தப்​பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்​தில் அதற்கு நேர் மாறாக ஆண்டுக்கு ஒரு தடவை டெட் தேர்வு நடத்​தப்​பட்​டாலே பெரிய விஷயமாக கருதப்​படு​கிறது. கடைசியாக கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் டெட் தேர்வு நடத்​தப்​பட்
​டது. அதன்​பிறகு கடந்த 2 ஆண்டுகாலமாக டெட் தேர்வு நடத்​தப்​பட​வில்லை.

கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் டெட் தேர்​வுக்கான அறிவிப்பு வெளி​யிடப்​பட்டு ஜூலை​யில் தேர்வு நடத்​தப்ப​டும் என டிஆர்பி 2024 வருடாந்திர தேர்வு அட்ட​வணை​யில் தெரி​வித்​திருந்​தது. ஆனால் 2024-ம் ஆண்டு கடந்து புத்​தாண்டு பிறந்​தும் இன்னும் டெட் தேர்​வுக்கான அறிவிப்புகூட வெளி​யிடப்​பட​வில்லை.

இதனால் பிஎட் பட்ட​தா​ரி​களும், இடைநிலை ஆசிரியர் பயிற்​சியை முடித்த ஆசிரியர்​களும் மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகி​யுள்​ளனர். காரணம், டெட் தேர்​வில் தேர்ச்சி பெற்​றால் அரசு பள்ளி​களில் அல்லது அரசு உதவி பெறும் பள்ளி​களில் எப்படி​யும் ஆசிரியர் பணியில் சேர்ந்​து​விடலாம் என்பது​தான்.

தற்போது அரசு பள்ளி​களி​லும், அரசு உதவி பெறும் பள்ளி​களி​லும் பட்ட​தாரி ஆசிரியர், தொடக்​கப்​பள்ளி, நடுநிலைப்​பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்​வுக்​கும் டெட் தேர்ச்சி கட்டாயம் என்ப​தால் டெட் தேர்வை எதிர்​பார்த்​துக் கொண்​டிருக்​கும் பணியில் உள்ள ஆசிரியர்​களும் டிஆர்​பி-​யின் நடவடிக்கை​யால் மனச்​சோர்வு அடைந்​துள்ளனர். இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரி​யத்​தின் உயர் அதிகாரி ஒரு​வரிடம் கேட்​ட​போது, "டெட்தேர்வு நடத்து​வதற்கு அரசின் அனு​மதி கிடைத்​ததும் உடனடியாக அறி​விப்பு வெளி​யிடப்​பட்டு தேர்வு நடத்​தப்​படும்​ என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x