Published : 22 Nov 2024 06:54 AM
Last Updated : 22 Nov 2024 06:54 AM

அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து இ-காமர்ஸ் டெவலப்பர் பயிற்சி: சென்னை ஐஐடி அறக்கட்டளை ஏற்பாடு

சென்னை: அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து மின்னணு வர்த்தக (இ-காமர்ஸ்) தொழில்நுட்ப பயிற்சி அளிக்க சென்னை ஐஐடி அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை ஐஐடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: சர்வதேச அளவில் இ-காமர்ஸ் வர்த்தகம் அடுத்த 3 ஆண்டுகளில் 7.97 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயரும். இந்த துறையில் வருடாந்திர வளர்ச்சி 7.7 சதவீதமாக இருக்கும். இதனால், பயிற்சி பெற்ற இ-காமர்ஸ் தொழில்நுட்ப நிபுணர்களுக்கான (கிளவுட் டெவலப்பர்ஸ்) தேவை அதிக அளவில் உருவாகும் என்று சந்தை ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

இதை கருத்தில் கொண்டு, சென்னை ஐஐடி பிரவர்தக் டெக்னாலஜீஸ் அறக்கட்டளை, கோடனேட்டிவ்ஸ் என்ற அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து இ-காமர்ஸ் டெவலப்பர் பயிற்சி (Salesforce B2C Commerce Cloud Training) அளிக்க ஏற்பாடு செய்துள்ளது.

இது 70 மணி நேர ஆன்லைன் பயிற்சி மற்றும் 130 மணி நேர நேரடி செயல்முறை பயிற்சியை கொண்டது. இதில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நவம்பர் 22-ம் தேதி (இன்று) தொடங்குகிறது. https://digitalskills.iitmpravartak.org.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x