Published : 20 Jun 2024 05:25 AM
Last Updated : 20 Jun 2024 05:25 AM

பகுதி நேர பி.இ. படிப்புகளுக்கு ஜூன் 27-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

கோவை: தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் 8 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ. படிப்புகளுக்கு வரும் 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் கோவை, மதுரை, நெல்லை, சேலம், பர்கூர்,காரைக்குடி, வேலூரில் உள்ள 8 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் பகுதிநேர பி.இ. படிப்புகள் நடத்தப்படுகின்றன.

சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய படிப்புகளில் 1,400 இடங்கள் உள்ளன.

இந்தப் படிப்புகளில் சேர டிப்ளமோ படிப்பு முடித்துவிட்டு, இரண்டு ஆண்டுகள் வேலைக்குச்சென்றவர்கள் தகுதியுடையவர்கள். பகுதி நேர பி.இ. படிப்பு 4ஆண்டு படிப்பாகும். முதலாமாண்டு பி.இ. படிப்புகளுக்கு வரும் 27-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

கூடுதல் விவரங்களை www.ptbe-tnea.com என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், கோவை தொழில்நுட்பக் கல்லூரி (சிஐடி) ஒருங்கிணைப்பு அலுவலகத்தை 0422-2590080, 9486977757 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x