Published : 03 Sep 2022 06:26 AM
Last Updated : 03 Sep 2022 06:26 AM
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பல்வேறு திருட்டு வழக்குகளில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் நேற்றுஅதிகாலையில் சரக்குகளை ஏற்றிக் கொண்டுஒரு ரயில் நெல்லை நோக்கி புறப்பட்டது. தூத்துக்குடி 3-வது மைல் அருகே அந்த ரயில்வந்த போது, திடீரென குறுக்கே ஒரு இளைஞர்பாய்ந்துள்ளார். ரயில் மோதியதில் தண்டவாளத்தின் ஓரத்தில் விழுந்துள்ளார். இதனைபார்த்த ரயில் இன்ஜின் டிரைவர் மீளவிட்டான் ரயில் நிலைய அதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் தூத்துக்குடி ரயில்வே போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர்.
அப்போது, ஒரு இளைஞர் வலது கை துண்டான நிலையில் ரத்த வெள்ளத்தில் அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக போலீஸார் அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தினர்.
அதில் உயிரிழந்த இளைஞர் தூத்துக்குடி சக்திநகர் 3-வது தெருவை சேர்ந்த நாகேந்திரன் மகன் வேல்முருகன்(23) என்பது தெரியவந்தது. இவர் மீது தூத்துக்குடி தென்பாகம், மத்தியபாகம், சிப்காட், முத்தையாபுரம் போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. நேற்று முன்தினம் ஆடு திருட்டு முயற்சி மற்றும் செல்போன் திருட்டில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பாக தென்பாகம் போலீஸார்2 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். மேலும்,வேல்முருகன் கடந்த ஓராண்டாக நோயினால் அவதிப்பட்டு வந்ததாகவும், இதில் மனம்உடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாகரயில்வேபோலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT