Published : 10 Jul 2022 04:00 AM
Last Updated : 10 Jul 2022 04:00 AM

சென்னை | ரூ.5 லட்சம், நகைகளை பெற்றுக் கொண்டு போலி தங்கம் கொடுத்து மோசடி வடமாநில இளைஞருக்கு வலை

பல்லாவரம்

உணவக உரிமையாளரிடம் ரூ.10 லட்சத்துக்கு 2 கிலோ தங்கம் கொடுப்பதாக ஏமாற்றி தப்பிய வடமாநில நபரை குரோம்பேட்டை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை ஆலந்தூர், வேதகிரிமுதலி தெருவைச் சேர்ந்தவர் மணி.இவர் தாம்பரம் அருகே படப்பையில் உணவகம் நடத்தி வருகிறார். இவரது உணவகத்துக்கு சில தினங்களுக்கு முன் சாப்பிட வந்த வட மாநில வாலிபர் ஒருவர் மணிக்குஅறிமுகமாகி உள்ளார்.

தொடர்ந்து வந்ததால் இருவரும் நன்கு பழக்கமாகிவிட்டனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தன்னிடம் 2 கிலோ தங்க உருண்டை இருப்பதாகவும், தனக்கு அவசர பணத்தேவை இருப்பதால் ரூ.10 லட்சம் கொடுத்தால் தங்கத்தை கொடுப்பதாகவும் மணியிடம் கூறியுள்ளார்.

இதை நம்பிய மணி அந்த அந்தநபரிடம் இருந்து மாதிரி தங்கத்தை வாங்கி பரிசோதித்ததில் தங்கம் உண்மையானதுதான் என உறுதியானது. இதை தொடர்ந்து, அந்தநபரிடம் ரூ.5 லட்சத்தை ரொக்கமாகவும் மீதி பணத்துக்கு 3.5 பவுன் நகையையும் மணி கொடுத்துள்ளார். பின்னர் தங்க கட்டிகளை அந்த வடமாநில வாலிபர்கொடுத்துவிட்டு, ரயில் ஏறி சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் இந்த தங்கக் கட்டிகளை அடகு வைக்க அருகில் இருந்த நகைகடைக்கு எடுத்து சென்றபோது அவை போலி என்பதுதெரியவந்தது. புகாரின் பேரில் குரோம்பேட்டை போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x