Published : 08 Jul 2022 04:30 AM
Last Updated : 08 Jul 2022 04:30 AM
புதுச்சேரியில் விபத்து வழக்கில் லட்சக்கணக்கில் நஷ்டஈடு கேட்டதால் மனமுடைந்த பிளஸ் 2 மாணவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி வில்லியனூர் அருகே கூடப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கார் ஓட்டுநர் பாபு. இவரது இரண்டாவது மகன் விஷ்ணுகுமார் (எ) பாலாஜி (17). பிளஸ் 2 முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். விஷ்ணுகுமார் கடந்த மார்ச் 9-ம் தேதி பைக்கில் பத்துக்கண்ணு பகுதிக்குச் சென்றபோது, அவ்வழியே மொபட்டில் வந்த பெண் மீது இடித்ததாகக் கூறப்படுகிறது. இதில் அப்பெண்ணுக்கு காலில்காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரின்பேரில் புதுச்சேரி தெற்கு போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த துணை உதவி ஆய்வாளர் ஒருவர் இருதரப்பையும் அழைத்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமாதானம் ஏற்படாததால், வழக்குப் பதிந்துள்ளார்.
இதனிடையே இதுதொடர் பாக மோட்டார் வாகன தீர்ப்பாயத்திலிருந்து பாபுவின் வீட்டுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு கேட்டு அண்மையில் சம்மன் வந்துள்ளது. இதனால் மனஉளைச்சலில் இருந்த விஷ்ணுகுமார், கடந்த 3-ம் தேதி ஐஸ்கிரீமில் விஷம் கலந்து சாப்பிட்டு மயங்கிக் கிடந்தார். மாலையில் வீட்டுக்கு வந்த பெற்றோர், விஷ்ணுகுமாரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் விஷ்ணு குமார் இறந்தார்.
இதுகுறித்து வில்லியனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடியோ வைரல்
இந்நிலையில் விஷ்ணுகுமார் இறப்பதற்கு முன்பு, அவரது செல்போனில் தனது தற்கொலைக் கான காரணங்கள் குறித்து பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், தான் லேசான விபத்தை ஏற்படுத்தியதை பெரிதுபடுத்தி வழக்குப் பதிந்துள்ளனர். எங்களால் ரூ.3 லட்சம் பணம் தர முடியாத சூழலில், மிகுந்த மனஉளைச்சலில் எலி மருந்து சாப்பிட்டுள்ளேன்.
எனது இறப்புக்கு போக்கு வரத்து போலீஸாரும், புகார் அளித்தவர்களும் தான்காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT