Published : 03 Jul 2022 04:00 AM
Last Updated : 03 Jul 2022 04:00 AM
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பகுதியில் விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்த்தவரை போலீஸார் கைது செய்தனர்.
பாலக்கோடு வட்டம் கெண்டேஅள்ளி அடுத்த பன்னிஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் சரவணன் (49). விவசாயியான இவர், தனது விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக மாரண்டஅள்ளி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேஷ்குமார் தலைமை யிலான போலீஸார் ஆய்வு நடத்தினர்.
இதில், வீட்டருகே இருந்த வாழைத்தோட்டத்தில் 3 கஞ்சா செடிகளை அவர் வளர்த்து வந்தது உறுதி செய்யப்பட்டது.
அப்போது, வாழைத் தோட்டத்தில் விவசாய பணிகளில் ஈடுபட்டிருந்த சரவணன், போலீஸாரைக் கண்டதும் தப்பியோட முயற்சி செய்தார். அவரை துரத்திப் பிடித்து கைது செய்த போலீஸார் சிறைக்கு அனுப்பினர். மேலும், நான்கரை அடி உயரம் வளர்ந்திருந்த, சுமார் 250 கிராம் எடையுள்ள 3 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.
கஞ்சா விற்பனை
காரிமங்கலம் வட்டம் வெள்ளையன் கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்த புளி வியாபாரி சின்னசாமி (80) வீட்டருகே இவர் கஞ்சா விற்பனை செய்வதாக அரூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸார் ஆய்வு நடத்தினர். இதில், சின்னசாமியிடம் இருந்து சுமார் 100 கிராம் எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. காரிமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் அவரை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT