Published : 19 Jun 2022 04:00 AM
Last Updated : 19 Jun 2022 04:00 AM
கனடாவில் வேலை வாங்கிக் கொடுப்பதாக கூறி சேலம் இளைஞரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்தவர் தொடர்பாக சைபர் கிரைம் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி பழைய தபால் நிலையம் அருகே வசித்து வருபவர் சுந்தரம். இவரது மகன் விஜய சரவணன் (26). கடந்த ஏப்ரல் மாதம் இவரை அவரது மெயில் முகவரியில் தொடர்பு கொண்ட ஒருவர், கனடாவில் வேலைவாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய விஜய சரவணன், மெயிலில் கேட்கப்பட்ட ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார்.
பின்னர், விஜய சரவணனை செல்போனில் தொடர்பு கொண்ட அந்த நபர், “கனடாவுக்கு செல்ல தயாராக இருக்கும்படியும், 5 வங்கிக் கணக்குகளை கொடுத்து, அதில் பணம் டிபாசிட் செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார். விஜய சரவணன், அந்த வங்கிக் கணக்குகளில் ரூ.8 லட்சத்து 13 ஆயிரத்தை செலுத்தியுள்ளார்.
அதன் பின்னர் அந்த நபரின் செல்போன் எண் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டதால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த விஜய சரவணன், இதுதொடர்பாக சேலம் மாநகர சைபர் கிரைம் பிரிவு போலீஸில் புகார் செய்தார். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT