Published : 03 Apr 2022 04:15 AM
Last Updated : 03 Apr 2022 04:15 AM
விருதுநகரில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை சம்பவத்தைத் தொடர்ந்து, முக நூல் மூலம் பழகிய ஆயுதப்படை காவலர் ஒருவர் காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக்கியதாக மேலும் ஒரு பெண் புகார் அளித்துள்ளார்.
விருதுநகரில் 22 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பள்ளி மாணவர்கள் 4 பேர் உட்பட 8 பேர் கைது செய் யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விருதுநகர் பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவருக்கு, விருதுநகர் ஆயுதப் படையில் காவலராகப் பணிபுரியும் கண்ணன் என்பவருடன் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்ததாகக் கூறப் படுகிறது.
இந்நிலையில், அந்த பெண் கர்ப்பமானார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பெண் கூறியபோது, அதற்கு காவலர் கண்ணன் மறுத்துள்ளார்.
அதன்பிறகே, காவலர் கண்ணன் வத்திராயிருப்பைச் சேர்ந்தவர் என்பதும், அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி 3 குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்தது.
மேலும் தன்னை மிரட்டி பலமுறை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் காவலர் கண்ணன் மீது விருதுநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அப்பெண் நேற்று புகார் அளித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
முகநூல் மூலம் எனக்கும், காவலர் கண்ணனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவர் குடி யிருக்கும் ஆயுதப்படை காவலர் குடியிருப்புக்கு அழைத்துச் சென்று உடல் ரீதியாக நெருங்கிப் பழகினார். பின்னர், என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டபோது, அதற்கு மறுத்தார்.
மேலும், என்னை மிரட்டி பலமுறை பாலியல் உறவு வைத்துக் கொண்டார். இதனால் தற்போது நான் 2 மாத கர்ப்பமாக உள்ளேன். எனவே காவலர் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் அளித்தார்.
இது குறித்து டிஎஸ்பி அர்ச்சனா விசாரணை நடத்தி வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT