Published : 14 Mar 2022 12:17 PM
Last Updated : 14 Mar 2022 12:17 PM

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: கரூரில் இளைஞர் உட்பட 3 பேர் மீது போக்ஸோ வழக்கு

கரூர்: கரூர் மாவட்டம் பள்ளபட்டி காயிதே மில்லத் நகரைச் சேர்ந்தவர் நாசர். இவரது மகன் முகமது காஜா (20). இவர், கோவையில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். முகமது காஜா பள்ளப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியிடம், தனக்கு போன் செய்து பேசுமாறு தெரிவித்துள்ளார். இதற்கு சிறுமி மறுத்துள்ளார். இதையறிந்த சிறுமியின் தாய் அதை தட்டிக் கேட்டுள்ளார்.

இதையடுத்து, முகமதுகாஜா, அவரது சகோதரி, தாய் ஆகிய 3 பேரும் சிறுமியின் தாயை திட்டி, மிரட்டியுள்ளனர். மேலும், சிறுமியை முகமதுகாஜா பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், முகமதுகாஜா, அவரது தாய், சகோதரி ஆகிய 3 பேர் மீது போக்ஸோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் நேற்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x