Published : 16 Jul 2020 06:33 PM
Last Updated : 16 Jul 2020 06:33 PM
தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் விபத்தில் சிக்கிய காயல்பட்டினம் இளைஞர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் ஹவாலா பணமா என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் 2 பேர் திருநெல்வேலி நோக்கிச் சென்றுகொண்டு இருந்தனர்.
அப்போது அவர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீஸார் அப்பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இருச்சக்கர வாகனத்தில் வந்தவர்கள் மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகைதீன் அசார் (20), தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தைச் சேர்ந்த முகம்மது சேக் முனவருதீன் (23) என்பது தெரியவந்தது.
இதில், முகமது சேக் முனவருதீன் வைத்திருந்த பையில் ரூ.34 லட்சம் இருந்துள்ளது. அந்த பணம் குறித்து அவர் கூறிய தகவல் முன்னுக்குன் பின் முரணாக இருந்ததால், ஹவாலா பணமா என்பது குறித்தும் அவருக்கு அந்த பணம் எப்படி கிடைத்தது என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முறையான கணக்கு இல்லாவிட்டால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT