Published : 04 Jan 2020 11:24 AM
Last Updated : 04 Jan 2020 11:24 AM
மதுரை கூடல் தூர் அப்பாத்துரை நகரில் வசிப்பவர் குணசேகரன. பிரபல கட்டிட ஒப்பந்ததாரரான இவரது வீட்டுக்கு கடந்த 27-ம் தேதி 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்தது.
மர்ம கும்பலைச் சேரந்தவர்கள் திடீரான வீட்டுக்குள் புகுந்துள்ளனர். அங்கிருந்த குணசேகரன் அவரது குடும்பத்தினரை துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளனர். 3 பேர் அவர்களை தங்களது கட்டுபாட்டுக்குள் வைத்துக் கொண்டு மற்ற இருவர் பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்த 170 பவுன், ரொக்கப் பணம் ரூ.2.80 லட்சத்தை கொள்ளையடித்துத் தப்பியுள்ளனர்.
ஆனால், இச்சம்பவம் குறித்து குணசேகரன் இன்று காலை தான் கூடல்புதூர் போலீஸில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
கொள்ளை நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து ரேகைப் பதிவுகளை சேகரித்தனர். தடயவியல் துறையினர் மேலும் சில ஆதாரங்களையும் சேகரித்துள்ளனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து போலீஸார், "சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. நகை பணத்துடன் சில முக்கிய ஆவணங்களும் கொள்ளை போனதாக குணசேகரன் புகார் தந்துள்ளார்.
கொள்ளைச் சம்பவம் நடந்த பாணியைப் பார்க்கும்போது குணசேகரனுக்கு நன்கு தெரிந்தவர்களே இதில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள், சந்தேக செல்போன் உரையாடல்களை சேகரிக்கிறோம். புகார் அளிக்க தாமதம் ஏன் என்பது பற்றியும் விசரிக்கிறோம். ஓரிரு தினத்தில் கொள்ளையர்களைப் பிடிப்போம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT