Published : 20 Sep 2019 10:05 AM
Last Updated : 20 Sep 2019 10:05 AM
ஒய்.ஆண்டனி செல்வராஜ்/ என்.சன்னாசி
மதுரை
தென் மாவட்டங்களில் கடந்த காலத்தைப்போல் மீண்டும் தொடர் கொலைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அரசியல் கொலைகள், ரவுடிகளுக்கு இடையேயான மோத லில் நடக்கும் பழிக்குப் பழி கொலை கள், சாதாரண அற்பக் காரணங் களுக்காக நடக்கும் கொலைகள் என்று அன்றாடம் நடக்கும் கொலை கள் மக்களுக்கு அச்சத்தையும், சட்டம்- ஒழுங்குப் பிரச்சினைக ளையும் ஏற்படுத்தி வருகின்றன. கடந்த காலத்தை ஒப்பிடும்போது தற்போது கொலைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
மதுரை நகரில் 2017-ல் 41 பேரும், 2018-ல் 40 பேரும், 2019-ல் 31 பேரும், இந்த ஆண்டில் தற்போது வரை 31 பேரும் கொலை செய்யப் பட்டுள்ளனர். மதுரை புறநகர் மாவட்டத்தில், 2017-ல் 55 பேரும், 2018-ம் ஆண்டில் 45 பேரும், இந்த ஆண்டு இதுவரை 50 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனர். மொத்தத்தில் மதுரை மாவட்டத்தில் இதுவரை இந்த ஆண்டு 81 கொலை கள் நடந்துள்ளன. இதில் 18 சதவீ தம் பெண்கள் கொலையானது குறிப் பிடத்தக்கது.
சிவகங்கை மாவட்டத்தில், 2017-ல் 49 பேரும், 2018-ல் 59 பேரும், 2019-ல் 44 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் 2017-ல் 30 பேரும், 2018-ல் 37 பேரும், இந்த ஆண்டில் இதுவரை 51 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் 2017-ல் 49 பேரும், 2018-ல் 59 பேரும், இந்த ஆண்டில் இதுவரை 44 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 2017-ல் 36 பேரும், 2018-ல் 38 பேரும், 2019-ல் இதுவரை 36 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2017-ல் 23 பேரும், 2018-ல் 36 பேரும், இந்த ஆண்டு இதுவரை 27 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 2016-ல் 64 பேரும், 2017-ல் 67 பேரும், 2018-ல் 60 பேரும், இந்த ஆண்டில் இதுவரை 54 பேர் கொலை செய்யப்பட்டுள்ள னர். தேனி மாவட்டத்தில் 2017-ல் 47 கொலைகளும், 2018-ல் 39 கொலை களும், 2019-ல் இதுவரை 43 கொலை களும் நிகழ்ந்துள்ளன.
இதுகுறித்து, போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
புதிய கொலையாளிகள்
தென் மாவட்டங்களில் சாதி ரீதியி லான கொலைகள் முன்பு அதிகம் நடந்தன. தற்போது குறைந்துவிட் டது. சாதி பிரச்சினை அதிகம் இல்லை சட்டம்- ஒழுங்குப் பிரச் சினைகளை ஏற்படுத்தும் பழி வாங்குதல், முன்பகை போன்ற கொலைகள் குறைவு. சொத்துத் தக ராறு, முறைகேடான உறவு போன்ற தனிப்பட்ட மோதல்களுக்காக உணர்ச்சிவசப்பட்டு நடக்கும் கொலைகள் அதிகரித்துள்ளன.
ரவுடிசம், குற்றப்பின்னணி போன்றவை இல்லாததால் பெரும் பாலும் குற்றவாளிகளே சரணடை தல் அல்லது கொலை நடந்த மறு நாளே போலீஸார் கைது செய்தல் போன்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு கொலைக்குப் பழிவாங்க இன்னொரு கொலை என்ற நிலை இல்லை. கலாச்சார மாற்றத்தால் புதிய கொலையாளிகளே அதிகம் உருவாகி வருகின்றனர் என்றனர்.
‘குண்டர் சட்டம்’ சொல்வது என்ன?
ரவுடிகளை ஒழிக்க குண்டர் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதில் கைது செய்யப்படுகிறவர்கள், ஓராண்டுக்கு ஜாமீனில் வெளிவர முடியாது. இச்சட்டப்பிரிவில் ஒருவர் கைது செய்யப்பட்டால், அவரது குற்றச் செயல் பற்றிய அனைத்து ஆவணங்களையும் தயார் செய்ய வேண்டும்.
இதில் இடம் பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் நகர் பகுதியாக இருந்தால் காவல்துறை ஆணையரும், மாவட்டமாக இருந்தால் ஆட்சியரும் கைது உத்தரவு பிறப்பிப்பர். இதில் சரியான ஆவணங்கள் இன்றி கைது செய்யப்பட்டால், அவர்கள் சென்னையிலுள்ள ஆலோசனைக் குழு (அட்வைசரி போர்டு) மூலம் சிறைக்குப்போன வேகத்தில் வெளியே வந்துவிடுகின்றனர்.
குற்றவாளிகள் தப்பிக்க முடியாத வகையில் போலீஸார் உரிய ஆவணங்களைத் தயார் செய்து குண்டர் சட்டத்தில் கைது செய்தால் இவர்கள் கைதான சில மாதங்களிலேயே விடுதலையாவது தடுக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT