Published : 11 Sep 2019 08:54 AM
Last Updated : 11 Sep 2019 08:54 AM

கடையம் தம்பதியிடம் கொள்ளை சம்பவம்: ஒரு மாதமாகியும் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீஸார் திணறல்

முகமூடி கொள்ளையர்களை எதிர்த்து போராடும் தம்பதி. (கோப்புப் படம்)

திருநெல்வேலி

முகமூடி கொள்ளையரை கடையம் தம்பதியினர் விரட்டியடித்த சம்பவத் தில், கொள்ளையர் இன்னும் சிக்க வில்லை. இவ்வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் போலீஸா ரின் நடவடிக்கையில் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் கடை யம், கல்யாணிபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல் (70). தனியார் நூற் பாலையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், தனது மனைவி செந்தாமரை யுடன் (65) தோட்டத்து பண்ணை வீட்டில் வசிக்கிறார்.

கடந்த மாதம் 11-ம் தேதி இரவு தனது வீட்டின் முன்பு அமர்ந்திருந்த சண்முகவேலை முகமூடி அணிந்து அரிவாள்களுடன் வந்த 2 பேர் தாக்கி கொள்ளையடிக்க முயன்ற னர். அவர்களுடன் சண்முகவேல் போராடினார். சத்தம் கேட்டு வந்த அவரது மனைவி செந்தாமரை கையில் கிடைத்த பொருட்களை எடுத்து கொள்ளையரை நோக்கி வீசி எறிந்து, விரட்டியடித்தார்.

இருப்பினும், செந்தாமரையை வெட்டி, அவரது 35 கிராம் நகையை பறித்துக்கொண்டு கொள்ளையர் கள் தப்பிச் சென்றதாக கூறப்படு கிறது. கொள்ளையர்களை எதிர்த்து, தம்பதிகள் போராடி விரட்டியடித்த காட்சி, அவர்களது வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. பல்வேறு தரப்பினரும் இத்தம்பதியை பாராட்டினர். சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், சண்முகவேல்- செந்தாமரை தம்பதிக்கு ‘அதீத துணிவு’ விருது வழங்கி, தமிழக முதல்வர் பாராட்டினார்.

கொள்ளை முயற்சி குறித்து கடையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, 4 தனிப்படைகள் அமைத்து, கொள்ளையர்களை தேடினர். கொள்ளையர்களை கண்டுபிடிக்க முடியாததையடுத்து தனிப்படை கள் எண்ணிக்கை 7-ஆக அதிகரிக் கப்பட்டது. கொள்ளையர்கள் விட்டுச் சென்ற செருப்பு, துணி, கண் காணிப்பு கேமரா பதிவு ஆகிய வற்றை ஆதாரமாக கொண்டு, நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் தனிப் படை போலீஸார் விசாரணை நடத்தி யும் குற்றவாளிகளை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

அம்பாசமுத்திரம் டிஎஸ்பி ஜாகிர் உசேன் ஆலங்குளத்துக்கும், ஆலங் குளம் டிஎஸ்பி சுபாஷினி கடையத் துக்கும் இடமாற்றம் செய்யப்பட்ட னர். ஆலங்குளம் பகுதியில் பல் வேறு வழக்குகளை திறம்பட கையாண்ட சுபாஷினி கடையத் துக்கு மாற்றப்பட்டதால், கொள்ளை யர்கள் விரைவில் கண்டுபிடிக்கப் படுவார்கள் என பொதுமக்கள் எதிர் பார்த்தனர். ஆனால், டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டு 10 நாட்களாகியும் புதிய இடத்தில் அவர்கள் பொறுப்பேற்கவில்லை.

உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் அப்பாவி மக் களை விசாரணை என்ற பெயரில் போலீஸார் அழைத்துச் சென்று துன்புறுத்துவதாகக் கூறி, கல்யாணி புரம் பகுதி மக்கள் சாலை மறி யல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீஸார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி னர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x