Published : 05 Sep 2019 08:43 AM
Last Updated : 05 Sep 2019 08:43 AM
திருச்சி
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் திமுக முன் னாள் ஊராட்சி மன்றத் தலைவர் உட்பட 4 பேரை ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்துள் ளனர்.
திருச்சி கீழ சிந்தாமணி பகுதி யைச் சேர்ந்த கந்தசாமி மகன் முத்து (50). பால் வியாபாரியான இவர், புலிவலம் அருகே ஒரு கிராமத் தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனால் உடல்ரீதியாக பாதிக்கப் பட்ட அச்சிறுமியை, சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து, அச்சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீ ஸார் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து, முத் துவை கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி கைது செய்தனர்.
அதைத்தொடர்ந்து நடத்தப் பட்ட விசாரணையில் பால் வியாபாரி முத்து தவிர, வேறு சிலரும் அச் சிறுமியை பாலியல் துன்புறுத்த லுக்கு உட்படுத்தியது தெரிய வந்தது.
அதன்பேரில் திமுக பிரமுகரும், பெரமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான செல்வ ராஜ்(42), பெரமங்கலம் மேற்கு தெருவைச் சேர்ந்த துரைசாமி மகன் செல்வராஜ்(50), திரு வெள்ளறை அருகேயுள்ள குன்னாக்குளத்தைச் சேர்ந்த ராமு (எ) ராமராஜன்(39) ஆகியோரை போலீஸார் அடுத்தடுத்து கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறிய போது, "தொடர்புடைய சிறுமி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இதைப் பயன்படுத்தி வெவ்வேறு கால கட்டங்களில் அச்சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளனர்.
இதனால் 4 மாத கர்ப்பம் என்ற நிலையில், அச்சிறுமி தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படை யில் 4 பேர் கைது செய்யப்பட்டுள் ளனர்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT