Published : 27 Aug 2019 09:28 PM
Last Updated : 27 Aug 2019 09:28 PM
சென்னை
பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் தனது ஆண் நண்பருக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக புகாரின்பேரில் நடிகை மீரா மிதுன் மீது எழும்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை எம்.கே.பி நகரில் வசிப்பவர் ப்ரவீன்(32). இவர் கடந்த 13 வருடங்களாக எழும்பூரில் RAZZ MATAZZ EVENT MANAGEMENT என்ற அலுவலகம் நடத்தி வருகிறார். 2017-ம் ஆண்டு முகநூல் வழியாக மீரா மிதுனுடன் நட்பு ரீதியான பழக்கம் ஏற்பட்டுள்ளது.
மிஸ் தமிழ்நாடு பட்டம் பெற்றவர் மீரா மிதுன். பின்னர் தானே அழகிப்போட்டி நடத்துவதாக சொந்தமாக ஈவண்ட் நடத்தினார். இதில் சிலருடன் பிரச்சினை ஏற்பட்டு அது மோதலாகவே இருந்துவந்தது. இந்நிலையில் மீராமிதுன்மீது பிரவீன் புகார் அளித்தார். பதிலுக்கு மீரா மிதுன் புகார் அளித்தார். இதில் மீரா மிதுன் குறித்து சமூக வலைதளத்தில் பிரவீன் பேட்டி அளித்து அதுவும் வைரலானது.
மீரா மிதுன் என்பவர் 2019 -ம் ஆண்டில் மிஸ் தமிழ்நாடு என்ற பட்டத்தை வென்றுள்ளார். சமீபத்தில் பிக்பாஸ் சீசன் -3 யிலும் கலந்துக்கொண்டார். அதில் அவர் சேரனுடன் தகராறில் ஈடுபட்டு பிரபலமானார். பின்னர் எவிக்ஷனில் வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் இவர்மீது ரஞ்சிதா என்பவர் பணமோசடி புகார் அளிக்க போலீஸார் வழக்குப்பதிவு செய்து சம்மன் அனுப்பியிருந்தனர்.
இந்நிலையில் பணப்பிரச்சினை காரணமாக இருந்துவந்த கருத்து வேறுபாடு காரணமாக கோபத்தில் மீராமிதுன் பேசிய மிரட்டல் காணொலி ப்ரவீனுக்கு கிடைத்துள்ளது. சிடியை கடந்த 14 -ம் தேதி ப்ரவீனின் அலுவலகத்திற்கு வந்த மீரா மிதுன் மேனேஜர் வெங்கட் என்பவர் கொடுத்ததாகவும், அதில் மீரா மிதுன், வெங்கட், டோனி, தினேஷ் என்பவர்கள் பேசிய விவரம் இருந்துள்ளதாகவும், அதில் மீரா மிதுன் ப்ரவீனை பயமுறுத்து வகையில் அவருக்கு உயிருக்கு சேதம் இல்லாமல் அவருடைய கைகளை உடைத்தோ அல்லது அவருடைய குடும்பத்தார் மனைவி அம்மா, பிள்ளைகளை கொல்லவேண்டும் என பேசியது பதிவாகியிருந்ததை கேட்டதாக கூறி காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரவீன் கடந்த 16-ம் தேதி புகார் அளித்தார்.
புகாரைப்பெற்ற காவல் ஆணையரக அதிகாரிகள் அதை விசாரிக்க உத்தரவிட்டு எழும்பூர் காவல் நிலையத்திற்கு அனுப்ப அதை விசாரித்த எழும்பூர் போலீஸார் புகார் உண்மை என தெரிய வந்ததன்பேரில் மீராமிதுன்மீது பிரிவு 294(பி) (ஆபாசமாக, அவதூறாக பேசுதல்), 506(1) (கொலை மிரட்டல்) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT