Published : 14 Aug 2019 05:46 PM
Last Updated : 14 Aug 2019 05:46 PM

மனைவியை கேலி செய்தவரை தட்டிக் கேட்டதால் கணவர் வெட்டிக் கொலை: மதுரையில் 3 இளைஞர்கள் கைது  

மதுரையில் மனைவியை கேலி செய்த பிரச்னையில் தட்டிக் கேட்ட கணவரை கொலை செய்த 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

மதுரை மதிச்சியம் ஆர் ஆர். மண்டபத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (35). சுமை தூக்கும் தொழிலாளி.

சில தினங்களுக்கு முன், இவரது மனைவி ஹேமலதா தனது மகளுடன் இரவில் வைகை ஆற்றுக்குள் திறந்தவெளி கழிப்பறைக்கு சென்று விட்டு, வீடு திரும்பினார். ஆர்ஆர். மண்டபம் அருகே அவர்களை செல்லூர் அகிம்சாபுரத்தைச் சேர்ந்த அல்வா உமாமகேசுவரன்(21) என்பவர் கேலி கிண்டல் செய்தார்.

இது தொடர்பாக மணிகண்டன் மற்றும் அவரது உறவினர்கள் உமாமகேசுவரனை தட்டிக்கேட்டு தாக்கியுள்ளனர். இதில் அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மணிகண்டன் தனது மனைவியுடன் சென்று அருகிலுள்ள ஓட்டலில் புரோட்டா பார் ல் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினார். நடந்து சென்றபோது, அங்குள்ள சப்பானி கோயில் தெரு அருகே வழிமறித்த கும்பல் மணிகண்டனை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியது. இது பற்றி தகவல் அறிந்த மதிச்சியம் போலீஸார் உடலை மீட்டு விசாரித்தனர்.

விசாரணையில், முன்விரோதம் காரணமாக செல்லூர் உமா மகேசுவரன், அவரது கூட்டாளிகளான மதிச்சி யம் மீனாட்சி சுந்தரம்(22), ஆர்ஆர். மண்டபம் மாரிமுத்து (23) ஆகியோர் கொலையில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை போலீஸார் இன்று (புதன்கிழமை) கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x