Published : 06 Aug 2019 10:49 AM
Last Updated : 06 Aug 2019 10:49 AM
கோவில்பட்டி
கழுகுமலையில் தகாத உறவை கண்டித்ததால் ஒன்றரை வயது குழந்தையை கொன்றதாக தாய் மற்றும் இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
கழுகுமலை அருகே பழங் கோட்டையை சேர்ந்தவர் ராஜு(45), மின்வாரிய அலுவலகத்தில் பணி யாற்றி வருகிறார். இவரது மனைவி வடகாசி(40). இவர்களுக்கு ஒன்றரை வயதில் தானேஷ் பிரபாகரன் என்ற ஆண் குழந்தை இருந்தது.
வடகாசிக்கும், கழுகுமலை ஆறுமுகநகரை சேர்ந்த சுவாமி என்ற சுவாமிநாதன்(32) என்பவருக் கும் இடையே தொடர்பு ஏற்பட் டுள்ளது. இதையறிந்த ராஜு, இருவரையும் கண்டித்துள்ளார். மேலும், தனது குழந்தையை சங்கரன்கோவிலில் உள்ள வடகாசியின் தாய் பராமரிப்பில் விட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வடகாசி தனது குழந் தையை பார்க்க சங்கரன் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது குழந்தையை வீட்டுக்கு தூக்கி வரும்படி ராஜு அவரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து குழந்தையை தூக்கிக் கொண்டு நேற்று முன்தினம் மாலை பழங் கோட்டைக்கு வடகாசி வந்துள் ளார். நள்ளிரவு 2 மணிக்கு ராஜு எழுந்து பார்த்த போது மனைவி, குழந்தையை காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் அவர்கள் குறித்த தகவல் கிடைக்கவில்லை.
ஒருவேளை சுவாமிநாதன் வீட்டுக்கு குழந்தையுடன் வடகாசி சென்றிருக்கலாம் என எண்ணிய ராஜூ, நேற்று அதிகாலை 3 மணிக்கு கழுகுமலையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டுக்குள் சுவாமி நாதன் குழந்தையை தாக்கிக் கொண்டிருந்ததை பார்த்து ராஜு சத்தம் போட்டுள்ளார். உடனடியாக வடகாசியும், சுவாமிநாதனும் குழந்தையை தூக்கிக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டனர். காலை யில் விசாரித்தபோது, சங்கரன் கோவில் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அவர்கள் கொண்டு சென்றதாகவும், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியதும் தெரியவந்தது.
இதுகுறித்து ராஜு கழுகுமலை காவல் நிலையத்தில் புகார் அளித் தார். இதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து வடகாசி, சுவாமிநாதனை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT