Published : 06 Aug 2019 08:01 AM
Last Updated : 06 Aug 2019 08:01 AM
சென்னை
மேற்கு வங்க பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடன் வசித்து வந்த நேபாள இளைஞர் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த வர் பிங்கி (30). இவர் சென்னை அண்ணாநகர் மேற்கு எச் பிளாக்கில் உள்ள ஒரு வீட்டில் 2 ஆண்டு களாக வசித்து வந்தார். டாட்டூ போடுவது, சேலை வியாபாரம் ஆகியவற்றை செய்து வந்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த பிங்கி, நேபாளத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் பகதூர் (26) என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் வீட்டில் பிங்கி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்த தாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த திருமங்கலம் போலீஸார் விரைந்து வந்து, சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உடலில் காயங்கள் இருந்ததால் பிங்கி கொலை செய்யப்பட்டுள்ளார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டளது. இதுதொடர்பாக கிருஷ்ண பகதூர் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT