Published : 02 Aug 2019 08:22 AM
Last Updated : 02 Aug 2019 08:22 AM
ராமநாதபுரம்
பிரபல நடிகையை சந்திக்க வைப் பதாகக் கூறி ராமநாதபுரம் தொழில் அதிபர் ஒருவரின் மகனிடம் ரூ.70 லட்சம் முறைகேடு செய்த திரைப் படத் தயாரிப்பாளரைப் போலீஸார் கைது செய்தனர்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு தொழில் அதிபரின் 24 வயது மகன், சில மாதங்களுக்கு முன்பு நடிகைகளின் படங்களுடன் கூடிய ஆபாச இணையதளத்தில் தனது செல்போன் எண்ணைப் பதிவு செய் தார். அதையடுத்து பிரபல நடிகை களுடன் தொடர்பு ஏற்படுத்தித் தருவ தாக அவரது செல்போனுக்கு குறுஞ் செய்தி மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் செல்போன் எண் மூலம் இணையதள மோசடிக் கும்பல் அவரது முகநூல் முகவரியைத் தேடி புகைப்படம் உட்பட மற்ற விவரங்களை எடுத்துள்ளனர். இதையடுத்து அவரிடம் ரூ.50,000 கட்டணம் செலுத்துமாறு அந்த கும்பல் தெரிவித்துள்ளது.
பின்னர் தொழில் அதிபர் மகனின் புகைப்படத்தை மார்பிங் செய்து, நடிகைகளுடன் இருப்பதுபோல் சித்தரித்து, அவரை மிரட்டியுள்ள னர். இதனால் பயந்த இவர், தந்தை யின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.70 லட்சம் வரை பல்வேறு தவணைகளில் சிவகங்கையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது கணக்கில் செலுத்தியுள்ளார்.
தொடர்ந்து இணையதள மோசடிக் கும்பல் பணம் கேட்டு மிரட்டியதால் மனமுடைந்த தொழில் அதிபரின் மகன், கொல்கத் தாவுக்குச் சென்று தலைமறைவா னார். அங்கிருந்து தந்தையை தொடர்புகொண்டு தற்கொலை செய்யப்போவதாகத் கூறியுள்ளார்.
இதுகுறித்து தொழில் அதிபர் கடந்த ஜனவரியில் ராமநாதபுரம் எஸ்.பி.யிடம் புகார் அளித்தார். அதன்பேரில், தனிப்படை போலீ ஸார் கொல்கத்தா சென்று, தொழில் அதிபரின் மகனை மீட்டு ராமநாத புரம் அழைத்து வந்தனர்.
அதைத் தொடர்ந்து தொழில் அதிபரின் மகன் மூலம் இணைய தள கும்பலிடம் பேசச் செய்து, பணம் தருவதாக ஏமாற்றி அழைத் துள்ளனர். அப்போது சென்னை அசோக் நகரில் பணம் வாங்க வந்த சென்னையைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் சரவணக்குமார்(38) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா கூறும்போது, இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகிறோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT