Published : 29 Jul 2019 11:10 AM
Last Updated : 29 Jul 2019 11:10 AM
பூந்தமல்லி அருகே கத்தியால் தாக்கி தங்கச் சங்கிலியை பறிக்க முயன்ற இளைஞரை, பெண் ஒருவர் மடக்கிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே உள்ள காட்டுப்பாக்கம், ஓம் சக்தி நகரை சேர்ந்த மூர்த்தியின் மனைவி தனலட்சுமி. இவர் திரைப்படத் துறையில் பணிபுரிந்து வருகிறார். தனலட்சுமி நேற்று முன்தினம் இரவு காட்டுப்பாக்கம் அடுத்த செந்தூர்புரம் பிரதான சாலையில் உள்ள மளிகைக் கடைக்கு சென்றுவிட்டு நடந்து சென்று கொண்டிருந்தார்.
விஜயலட்சுமி நகர் அருகே சென்றபோது, பின்னால் மோட் டார் சைக்கிளில் வந்த இளை ஞர், தனலட்சுமி அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றார்.
இதனால், அதிர்ச்சிய டைந்த தனலட்சுமி அந்த இளைஞரை மடக்கிப் பிடித் தார். கோபமடைந்த இளை ஞர், தான் வைத்திருந்த கத்தி யால் தனலட்சுமியை தாக் கினார். கையில் பலத்த காய மடைந்த நிலையிலும், அந்த இளைஞரை தப்பிக்க விடாமல் பலமாக பிடித்துக் கொண்டு தனலட்சுமி கூச்சலிட்டார்.
உடனே, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து அந்த இளைஞரை சுற்றி வளைத்து பிடித்து அடித்து உதைத்தனர். பின்னர், பூந்தமல்லி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
போலீஸார் அந்த இளை ஞரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், பிடிபட்டவர் காஞ்சிபுரம் மாவட்டம், அய்யப்பன்தாங் கல், இந்திரா நகரை சேர்ந்த சிவ குமார் என்பதும், அவர் போலீஸாரிடம் சிக்கிக் கொள் ளும்போது தப்பிப்பதற்காக போலியான பத்திரிகையா ளர் அடையாள அட்டை யையும், ’பிரஸ்’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட மோட்டார் சைக்கி ளையும் பயன்படுத்தி வந்த தும் தெரியவந்தது.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த பூந்தமல்லி போலீஸார் சிவகுமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT