Published : 16 Jul 2019 09:58 AM
Last Updated : 16 Jul 2019 09:58 AM
திருவாரூர் மாவட்டம் கண்கொடுத்த வணிதம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(35). இவரது மனைவி அமராவதி(30). இவர்க ளுக்கு மகள், மகன் உள்ளனர்.
செந்தில்குமார் கேரளாவில் கூலி வேலை பார்த்து வந்தார். 3 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த செந்தில்குமார், தான் முஸ்லிமாக மதம் மாறிவிட்ட தாகவும், தனது பெயர் அப்துல் அஜீஸ் என்றும் கூறியிருக்கிறார்.
இதனால், அமராவதிக்கும் செந்தில் குமாருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்த செந்தில்குமார், தனது மனைவி அமராவதியின் நடத்தையில் சந்தேகமடைந்து, நேற்று அவரது தலையில் கட்டையால் தாக்கியுள்ளார்.
பின்னர், அமராவதி மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளார்.
அமராவதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே, வீட்டின் பின்பக்க வழியாக தப்பிச் சென்ற செந்தில்குமார் பாண்டவையாற்றின் கரையோரத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கொரடாச்சேரி போலீஸார், பலத்த தீக்காயத்துடன் இருந்த அமராவதியை மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அமராவதி உயிரிழந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT