Published : 19 Nov 2025 06:38 AM
Last Updated : 19 Nov 2025 06:38 AM

சென்னை | லேப்-டாப் வியாபாரியிடம் ரூ.55 லட்சம் வழிப்பறி: தலைமறைவாக இருந்த 3 பேர் கைது

சென்னை: லேப்-டாப் வியாபாரியிடம், போலீஸ் எனக் கூறி, ரூ.55 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். சென்​னை, ரிச்சி தெரு​வில் நரேஷ்கு​மார் (38) என்​பவர் லேப்​-​டாப் உதிரி பாகங்​கள் விற்​பனை செய்​யும் கடை நடத்தி வரு​கிறார்.

இவர் கடந்த அக். 3-ம் தேதி இரவு, அவரது நண்​பருக்கு சொந்​த​மான ரூ.55 லட்​சம் பணத்தை வங்​கி​யில் டெபாசிட் செய்​வதற்​காக இருசக்கர வாக​னத்​தில் சென்று கொண்​டிருந்​தார். அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாக​னங்களில் வந்த சிலர் நரேஷ்கு​மாரை வழிமறித்​தனர்.

தாங்​கள் போலீஸ் எனக் கூறி, பணத்தை பறி​த்து சென்றனர். அதிர்ச்சி அடைந்த நரேஷ்கு​மார், பூக்​கடை காவல் நிலை​யத்​தில் புகார் தெரி​வித்​தார். போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். அதன்பேரில் வழிப்​பறி​யில் ஈடுபட்டதாக அன்​பரசி (30), விமல் அபிஷேக் ஞானஷாம் (24), காயத்ரி (29) ஆகிய 3 பேரை கடந்த அக். 11-ம் தேதி கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வந்தனர்.

இந்நிலையில் கோயம்புத்​தூர் மாவட்​டம், காரமடையைச் சேர்ந்த அன்​வர்​தீன் (39) என்​பவரை நேற்று முன்​தினம் கைது செய்​தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில், அதே மாவட்​டம் குனிய​ முத்​தூரைச் சேர்ந்த பாவா (30), செங்​கல்​பட்டு மாவட்​டம், கல்​பாக்​கத்​தைச் சேர்ந்த ரூபன் சக்​ர​வர்த்தி (29) ஆகியோரை நேற்று கைது செய்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x