Published : 18 Nov 2025 06:23 AM
Last Updated : 18 Nov 2025 06:23 AM

சென்னை | குட்கா கடத்திய அசாம் இளைஞர்கள் 4 பேர் கைது

சென்னை: எழும்​பூர் போலீ​ஸார் நேற்று அதி​காலை எழும்​பூர், காந்தி இர்​வின் சாலை, ஆவணக் காப்​பகம் அருகே கண்காணித்தனர். அப்​போது, அங்கு சந்​தேகத்​துக்​கிட​மான முறை​யில் நின்று கொண்​டிருந்த 4 பேரிடம் சென்று விசா​ரித்​தனர்.

அப்​போது, அவர்​கள் முன்​னுக்​குப்​பின் முரணாக பதிலளித்​தனர். இதையடுத்து அவர்​கள் வைத்​திருந்த பைகளை சோதித்து பார்த்​த​போது அதில், குட்கா மற்​றும் கஞ்சா பொட்​டலங்​கள் மறைத்து வைத்​திருந்​தது தெரிய​வந்​தது.

அவற்றை போலீ​ஸார் உடனடி​யாக பறி​முதல் செய்​தனர். மேலும், குட்கா மற்​றும் கஞ்​சாவை வைத்​திருந்​த​தாக அசாம் மாநிலத்​தைச் சேர்ந்த அனருல் இஸ்​லாம் (31), அதே மாநிலத்​தைச் சேர்ந்த அபிதுல் இஸ்​லாம் (22), இக்​ரா​முல் உசேன் (30), முகமது ஜுனே​யத் (19) ஆகிய 4 பேரை கைது செய்​தனர்.

விசா​ரணை​யில், கைது செய்​யப்​பட்ட 4 பேரும் அசாம் மாநிலத்​திலிருந்து சென்​னைக்கு வேலைக்கு வந்​ததும், குட்கா மற்​றும் கஞ்​சாவை ரயில் மூலம் கடத்தி வந்​ததும் தெரிய​வந்​தது. இதையடுத்து, அவர்​கள் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x