Published : 18 Nov 2025 06:44 AM
Last Updated : 18 Nov 2025 06:44 AM

முதல்வர் ஸ்டாலின், நடிகர் அஜித் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், நடிகர் அஜித் வீட்​டுக்கு மீண்​டும் வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது. வெடிகுண்டு மிரட்டல் விடும் சம்​பவம் தொடர்ந்து நடை​பெற்று வரு​கிறது. அந்த வகை​யில் நேற்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், நடிகர்​கள் அஜித், லிவிங்​ஸ்​டன், நடிகை குஷ்பு, தமிழக இளம் செஸ் விளை​யாட்டு வீரர் பிரக்​ஞானந்​தா, தமிழ்​நாடு பாடநூல் கழக தலை​வரும், பட்​டிமன்ற பேச்​சாள​ரு​மான திண்​டுக்​கல் லியோனி உள்​ளிட்ட 11 பேரின் வீடு​களுக்கு வெடிகுண்டு மிரட்​டல் வந்​தது.

வழக்​கம்​போல் டிஜிபி அலு​வல​கத்​துக்கு இ-மெ​யில் வாயி​லாக இந்த மிரட்​டல் கடிதம் வந்​திருந்​தது. மிரட்​டல் விடுக்​கப்​பட்ட 11 பேர் வீடு​களி​லும் வெடிகுண்டு நிபுணர்​கள் சோதனை நடத்தி வெறும் புரளி என்​பதை உறுதி செய்​தனர். முதல்​வர் உட்பட பலரது வீட்​டுக்கு மீண்​டும் மீண்​டும் வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x