Published : 17 Nov 2025 06:36 AM
Last Updated : 17 Nov 2025 06:36 AM

மாமல்லபுரம் | புள்ளி மானை வேட்​டை​யாடிய நபர் கைது

மாமல்லபுரம்: மாமல்​லபுரம் அடுத்த பூஞ்​சேரி பகு​தி​யில் போலீ​ஸார் நேற்று ரோந்து பணி​யில் ஈடு​பட்​டிருந்​த​போது, பைக்​கில் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் மடக்கி விசாரித்தனர். அப்போது அவர்கள் பைக்​கில் இருந்த மூட்​டையை வீசி தப்பி சென்​ற​னர். இதையடுத்​து, ஒரு​வரை மடக்கி பிடித்த போலீ​ஸார், பெண் புள்ளி மான் ஒன்றை கொன்று மூட்​டை​யில் கட்​டப்​பட்​டிருப்​பது தெரிந்தது.

இதையடுத்​து, மாமல்​லபுரம் போலீ​ஸார் மற்​றும் திருக்​கழுக்​குன்​றம் வனத்​துறை​யினர் புள்ளி மான் உடலை மீட்​டனர். மேலும், இதுதொடர்பாக வெண்​புருஷம் பகு​தியை சேர்ந்த கோகுல் (27) என்​பவரை திருக்​கழுக்​குன்​றம் வனத்​துறை ரேஞ்​சர் ராஜேஷ் தலை​மையி​லான வனத்​துறை​யினர் கைது செய்​தனர். தலைமறை​வான பூஞ்​சேரி நரிக்​குறவர் பகு​தியை சேர்ந்த சத்யா (25) என்ற நபரை வனத்​துறை​யினர் தேடி வரு​கின்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x