Published : 17 Nov 2025 06:52 AM
Last Updated : 17 Nov 2025 06:52 AM

திண்டுக்கல் | டிப்பர் லாரி மோதியதில் 3 பேர் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்​டுக்​கல் மாவட்​டம் வத்​தலக்​குண்டு அரு​கே​யுள்ள தெப்​பம்​பட்​டியைச் சேர்ந்​தவர் விவ​சாயி காத்​தவ​ராயன் (60). இவரது மனைவி ஜோதி (52). இந்​நிலை​யில், காத்​தவ​ராயன், மனைவி ஜோதி மற்​றும் பேரன் ஹர்​சன் (12), பேத்தி ஹர்​சினி (9) ஆகியோ​ருடன் இருசக்கர வாக​னத்​தில் உசிலம்​பட்டி - வத்​தலக்​குண்டு சாலை​யில் விரு​வீடு அருகே காந்​திபுரம் பிரிவு என்ற இடத்​தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, எதிரே வந்த டிப்​பர் லாரி எதிர்​பா​ராத​வித​மாக இருசக்கர வாக​னம் மீது மோதி​யது. இதில் சிறுமி ஹர்​சினி அந்த இடத்​திலேயே உயி​ரிழந்​தார். பலத்த காயமடைந்த காத்​தவ​ராயன், ஜோதி ஆகியோர் வத்​தலக்​குண்டு அரசு மருத்​து​வ​மனை​யில் உயி​ரிழந்​தனர். விபத்து குறித்து விரு​வீடு போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x