Published : 16 Nov 2025 12:17 AM
Last Updated : 16 Nov 2025 12:17 AM

கிட்னி விற்பனையில் மேலும் ஒரு இடைத்தரகர் கைது

நாமக்கல்: பள்​ளி​பாளை​யம் கிட்னி விற்​பனை விவ​காரம் தொடர்​பாக மேலும் ஒரு இடைத்​தரகர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

நாமக்​கல் மாவட்​டம் பள்​ளி​பாளை​யம், குமார​பாளை​யம் உள்​ளிட்ட பகு​தி​களில் விசைத்​தறித் தொழிலா​ளர்​களிடம் கிட்னி திருடப்​பட்ட விவ​காரம் தொடர்​பாக சிறப்​புக் காவல் படை​யினர் விசா​ரணை மேற்​கொண்டு வரு​கின்​றனர்.

விசா​ரணை​யில் பள்​ளி​பாளை​யம் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த ஸ்டா​லின் மோகன் (48), ஆனந்​தன் (45) ஆகியோர் கிட்னி விற்​பனை செய்​யும் இடைத்​தரகர்​களாக செயல்​பட்​டது தெரிய​வந்​தது. இதையடுத்​து, கடந்த அக்​டோபர் மாதம் இரு​வரை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர்.

மேலும், அவர்​களிடம் நடத்​திய விசா​ரணை​யில் கிடைத்த தகவலின் அடிப்​படை​யில் நேற்று முன்​தினம் பள்​ளி​பாளை​யம் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கிட்னி விற்​பனை செய்​யும் இடைத்​தரகர் முத்​து​சாமி (45) என்​பவரை சிறப்பு காவல் படை​யினர் கைது செய்​தனர். அவரிடம் கிட்னி விற்​பனை தொடர்​பாக தொடர்ந்து வி​சா​ரணை நடை​பெற்​று வரு​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x