Published : 15 Nov 2025 07:24 AM
Last Updated : 15 Nov 2025 07:24 AM

வீட்டின் அருகே கார் நிறுத்துவதில் தகராறு: முதியவரை கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள்

பொன்​னேரி: சென்​னை, புழல் - சிவ​ராஜ் தெரு​வை சேர்ந்​தவர் பரத​ராமர் (61). இவரது வீட்​டின் அருகே அதே தெரு​வைச் சேர்ந்த குமரவேல் (43), காரை நிறுத்தி வந்​துள்​ளார். இதனால், இரு தரப்​பினருக்கு இடையே அடிக்​கடி தகராறு ஏற்​பட்டு வந்​துள்​ளது. அந்த வகை​யில், கடந்த 2022-ம் ஆண்டு பிப். 1-ம் தேதி குமர​வேல், பரத​ராமர் வீட்​டருகே கார் நிறுத்​தி​ய​தால் ஏற்​பட்ட தகராறு முற்​றியது.

இதனால், குமர​வேல், தன் குடும்​பத்​தினர் மற்​றும் உறவினர்​களு​டன் சேர்ந்து பரத​ராமரை​யும், அவரது மரு​மகளை​யும் தாக்​கி​னார். இதில், பலத்த காயமடைந்த பரத​ராமர், சென்னை ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலை​யில், பிப். 4-ம் தேதி உயி​ரிழந்​தார்.

இதுகுறித்​து, வழக்​குப் பதிவு செய்த புழல் போலீ​ஸார், குமர​வேல், மனைவி கல்​ப​னா, தாய் மாமன் அருணகிரி, மைத்​துனர் பழனி, சகோ​தரி​கள் மலர், சங்​கீதாவை கைது செய்​தனர். இந்த வழக்கு விசா​ரணை, பொன்​னேரி​யில் உள்ள கூடு​தல் மாவட்ட அமர்வு நீதி​மன்​றம்​-4-ல் நடந்து வந்​தது. இதில், அரசு தரப்​பில் வழக்​கறிஞர் கே.ஆர். லாசர் வாதிட்​டார். முடிவுக்கு வந்த வழக்கு விசா​ரணை​யில், குமர​வேல், அருணகிரி மீதான குற்​றம் நிரூபிக்​கப்​பட்​டது.

இதனையடுத்​து,நேற்று முன் தினம் பொன்​னேரி, கூடு​தல் மாவட்ட அமர்வு நீதி​மன்​றம்​-4-ன் நீதிபதி சிவகு​மார் தீர்ப்பு அளித்​தார். குமர​வேலுக்​கு, பரத​ராமரை கொலை செய்த குற்​றத்​துக்கு ஆயுள் தண்​டனை​யும், ரூ.1,000 அபராத​மும், பரத​ராமரின் மரு​மகளை தாக்​கிய செய்த குற்​றத்​துக்கு ஓராண்டு சிறை தண்​டனை​யும் விதிக்​கப்​பட்​டது. தண்​டனை​களை, குமர​வேல் ஏக காலத்​தில் அனுபவிக்க வேண்​டும் என நீதிபதி தன் தீர்ப்​பில் தெரி​வித்​துள்​ளார்.

குமர​வேலின் தாய் மாமன் அருணகிரிக்கு (64), குமர​வேலுடன் சேர்ந்து பரத​ராமரை கொலை செய்த குற்​றத்​துக்கு ஆயுள் தண்​டனை, ரூ.1,000 அபராதம் விதிக்​கப்​பட்​டது. குமர​வேலின் மனைவி கல்​ப​னா, மைத்​துனர் பழனி, சகோ​தரி​கள் மலர், சங்​கீதா ஆகியோர் மீதான குற்​றம் நிரூபிக்​கப்​ப​டாத​தால், அவர்​கள் விடு​தலை செய்​யப்பட்டனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x