Published : 15 Nov 2025 06:59 AM
Last Updated : 15 Nov 2025 06:59 AM

சென்னை | பெண்ணின் வங்கி லாக்கரிலிருந்து ரூ.25 லட்சம் நகை, பணம் திருடிய மேலாளர் கைது

சென்னை: வேளச்​சேரியைச் சேர்ந்​தவர் சுரூபா ராணி சிவக்​கு​மார். இவர் அமெரிக்க குடி​யுரிமை பெற்று அங்கு வசிக்​கிறார். இவர் தனது ரூ.25 லட்​சம் மதிப்​புடைய தங்க நகைகள் மற்​றும் ரூ.21 லட்​சம் ரொக்​கத்தை வேளச்​சேரி​யில் உள்ள தனி​யார் வங்கி ஒன்​றின் லாக்​கரில் வைத்​திருத்​தார்.

இதை அவர் பெரும்​பாலும் பயன்​படுத்​து​வது இல்​லை. லாக்​கரை அணுகும் உரிமையை சென்​னை​யில் வசிக்​கும் தனது தாயிடம் ஒப்​படைத்​திருந்​தார். இந்​நிலை​யில், வங்கி லாக்​கரில் வைக்​கப்​பட்​டிருந்த நகை, பணம் மாய​மானது. இதையறிந்து அதிர்ச்சி அடைந்த சுரூபா ராணி, தனது சகோ​தரர் மூலம் சென்னை காவல் ஆணை​யரிடம் புகார் தெரி​வித்​தார்.

காவல் ஆணை​யர் அருண் உத்​தர​வின்​படி, மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்​குப்​ப​திந்து விசா​ரித்​தனர். இதில், சம்​பந்​தப்​பட்ட தனி​யார் வங்​கி​யின் மேலா​ளர், லாக்​கரைத் திறந்​து, ரூ.21 லட்​சம் மற்​றும் நகைகளைத் திருடியது தெரிய​வந்​தது. மேலும் அந்த நகையை ரூ.20.60 லட்​சத்​துக்கு அடகு வைத்​ததும் உறுதி செய்​யப்​பட்​டது. இதையடுத்து சம்​பந்​தப்​பட்ட வங்கி மேலா​ளரை போலீ​ஸார் கைது செய்து விசா​ரித்து வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x