Published : 13 Nov 2025 06:20 AM
Last Updated : 13 Nov 2025 06:20 AM

பைக்கில் சென்ற தம்பதியை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது

ராம​தாஸ்

சென்னை: டிஜிபி அலு​வல​கம் அருகே பைக்​கில் சென்று கொண்​டிருந்​த தம்​ப​தி​யைத் தாக்கி வழிப்​பறி​யில் ஈடு​பட்ட, கொள்​ளை​யன் கைது செய்யப்பட்டார். பழைய வண்​ணாரப்​பேட்​டை, நல்​லப்ப வாத்​தி​யார் தெரு​வைச் சேர்ந்​தவர் பாஸ்​கர் (55). இவர் கடந்த 9-ம் தேதி மனைவி மலர்க் ​கொடி (53) மற்​றும் மகளு​டன் ராயப்​பேட்​டை​யில் உள்ள ஓட்​டல் ஒன்​றுக்கு சென்று உணவருந்​தி​னார்.

பின்​னர் மகளை அங்​கேயே விட்​டு​விட்​டு, மனை​வி​யுடன், பாஸ்​கர் வீட்டுக்கு புறப்​பட்​டார். டிஜிபி அலு​வல​கம் அருகே காம​ராஜர் சாலை, ராணி மேரி கல்​லூரி எதிரே பைக் சென்​ற​போது, மற்​றொரு பைக்​கில் வந்த நபர் பாஸ்​கரின் மனைவி மலர்க்​கொடி தோளில் மாட்​டி​யிருந்த கைப்​பையை பறித்​து, இரு​வரை​யும் கீழே தள்​ளி​விட்டு தப்​பி​னார்.

இதில் இரு​வரும் படு​காயமடைந்​தனர். இதைக் கண்டு அந்த வழி​யாகச் சென்ற வாகன ஓட்​டிகள் இரு​வரை​யும் மீட்டு ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர். அங்கு அவர்​கள் தீவிர சிகிச்​சைப் பிரி​வில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். தகவல் அறிந்து மெரினா காவல் நிலைய போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டனர்.

இதில், வழிப்​பறி​யில் ஈடு​பட்​டது மயி​லாப்​பூர் நொச்சி நகரைச் சேர்ந்த ராம​தாஸ் (32) என்​பது தெரிய​வந்​தது. இதையடுத்து ராம​தாஸை போலீ​ஸார் கைது செய்​து, அவர் பறித்​துச் சென்ற ரூ.7 ஆயிரத்​துடன் கூடிய கைப்​பையை மீட்​டனர். ராம​தாஸ் மீது ஏற்​கெனவே ஒரு குற்ற வழக்​கு உள்​ளது தெரிய​வந்​தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x