Published : 13 Nov 2025 03:13 AM
Last Updated : 13 Nov 2025 03:13 AM

ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ரவுடி கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டு சிறை

சென்னை: ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்​கில் ரவுடி கருக்கா வினோத்​துக்கு 10 ஆண்டு சிறை தண்​டனை விதித்து பூந்​தமல்லி என்ஐஏ சிறப்பு நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​துள்​ளது.

ஆளுநர் மாளிகை முன்பு 2023 அக்​டோபர் 25-ம் தேதி அடுத்​தடுத்து 2 பெட்​ரோல் குண்​டு​கள் வீசப்​பட்​டன. இதுதொடர்​பாக கிண்டி போலீ​ஸார் ஜாமீனில் வெளியே வர முடி​யாத​படி 5 பிரிவு​களின்​கீழ் வழக்​குப் பதிந்து சென்னை நந்​தனத்​தைச் சேர்ந்த ரவுடி வினோத் என்ற கருக்கா வினோத்தை (42) கைது செய்​தனர்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்​டும், 10 ஆண்​டு​களுக்​கும் மேலாக சிறை​யில் உள்ள கைதிகளை விடுவிக்க வேண்​டும் என்பன உள்பட பல்​வேறு கோரிக்கைகளை வலி​யுறுத்தி பெட்ரோல் குண்டு வீசி​ய​தாக கருக்கா வினோத் போலீ​ஸாரிடம் வாக்​குமூலம் அளித்​திருந்​தார். இதையடுத்​து, அவர் புழல் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். பின்​னர், அவரை போலீ​ஸார் குண்​டர் சட்​டத்​தின் கீழும் கைது செய்​தனர். பெட்​ரோல் குண்டு வீச்சு என்​ப​தால் என்ஐஏ அதி​காரி​களும் விசா​ரித்​தனர். அவர்​கள் தனி​யாக கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசா​ரணை நடத்​தினர்.

பின்​னர், இந்த வழக்கு விசா​ரணை பூந்​தமல்​லி​யில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வந்​தது. இந்​நிலை​யில், கருக்கா வினோத்​துக்கு 10 ஆண்டு சிறை தண்​டனை மற்​றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி மலர்​விழி நேற்று தீர்ப்​பளித்​தார். அபராதத்தை கட்​டத் தவறி​னால் கூடு​தலாக 6 மாத சிறை தண்​டனை அனுபவிக்க வேண்​டும் எனவும் நீதிபதி தனது உத்​தர​வில் தெரி​வித்​துள்​ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x