Published : 11 Nov 2025 07:55 AM
Last Updated : 11 Nov 2025 07:55 AM

நடிகை த்ரிஷா வீட்டுக்கு 4-வது முறையாக குண்டு மிரட்டல்

சென்னை: கடந்த சில மாதங்​களாகவே தமிழகத்​தில் உள்ள பிரபல நடிகர்​கள், அரசி​யல் தலை​வர்​கள், வெளி​நாட்டு தூதரகங்​கள் உள்​ளிட்ட பல்​வேறு இடங்​களுக்கு அடுத்​தடுத்து வெடிகுண்டு மிரட்​டல்​கள் வந்த வண்​ணம் உள்​ளன. அந்த வகை​யில் நேற்று டிஜிபி அலு​வல​கத்​துக்கு மீண்​டும் ஓர் இ-மெ​யில் வந்​தது.

அதில் சென்னை ஆழ்​வார்​பேட்​டை​யில் உள்ள நடிகை த்ரிஷா வீடு, நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள அமலாக்​கத் துறை அலு​வல​கம் மற்றும் பழம்​பெரும் நடிகை சச்சு வீடு, கவிஞர் கண்​ண​தாசன் வீடுமட்​டும் அல்​லாமல் பிரபல பத்​திரி​கை​யாளர் வீடு என சென்னையில் 10 இடங்​களுக்கு வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது.

இதையடுத்​து, அந்த இடங்​களுக்கு போலீ​ஸார் வெடிகுண்​டு​களை கண்​டறிந்து அகற்​றும் நிபுணர்​கள் மற்​றும் மோப்ப நாயுடன் சென்று சோதனை நடத்​தினர். முடி​வில் சந்​தேகப்​படும்​படி​யான எந்த பொருட்​களும் கண்​டெடுக்​கப்​பட​வில்​லை.

இதையடுத்து புரளியைக் கிளப்​பும் வகை​யில் மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது தெரிய​வந்​தது. இதுகுறித்து சைபர் க்ரைம் போலீ​ஸார் விசா​ரிக்​கின்​றனர். நடிகை த்ரிஷா வீட்​டுக்கு 4-வது முறை​யாக வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x